Internet Banking Login

டிக்கிரி பரிசு வவுச்சர்

l
Features

“செலான் டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” என்பது தற்போதுள்ள “செலான் டிக்கிரி” கணக்கிற்கான ஒரு மேலதிக பெறுமதிச் சேர்ப்பாகும். ஆவணப் பிரச்சினை எதுவுமின்றி “செலான் டிக்கிரி” கணக்கில் வைப்புச் செய்வதற்கு வசதியானதொரு வழியை இது வழங்குகின்றது.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பரிசு, பிறந்தநாள் பரிசு, சாதனைகளுக்காக வழங்கப்படும் பரிசு போன்ற ஏதேனும் வகையில் பிள்ளைகளுக்கு அன்பளிப்புச் செய்யக்கூடிய இச் சீட்டை எமது வங்கிக் கிளைகளின் கருமபீடங்களில் இலகுவாகக் கொள்வனவு செய்ய முடியும்.

சிறுவர் சேமிப்புக் கணக்குகளைப் பொறுத்தமட்டில், 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட “செலான் டிக்கிரி” கணக்கின் மூலமே பிள்ளைகளுக்கான “டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இலங்கையிலுள்ள சிறுவர் சேமிப்பு அன்பளிப்புச் சீட்டுகள் அனைத்திலும் டிக்கிரி அன்பளிப்புச் சீட்டே மிகப் பிரபலமானதும் பயன் நிறைவானதும் ஆகும்.

சீட்டு ஒன்றைப் பெறுவது எப்படி?
  • தேவையான அடிப்படைத் தகவல்
    • பிள்ளையின் முழுப் பெயர்
  • கொள்வனவு இடங்கள்:
  • குறைந்தபட்ச வைப்புத் தொகை
    விபரங்கள் தொகை
    குறைந்தபட்ச தொகை LKR 500/-, அதனையடுத்து 100/- இன் மடங்குகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செலான் ”டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” என்றால் என்ன?

செலான் “டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிள்ளைக்கு அன்பளிப்புச் செய்வதற்காக எமது கிளைக் கருமப்பீடங்களில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய சீட்டாகும்.

செலான் “டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றைப் பெறுவது எப்படி?

இதனை எந்தவொரு கிளையிலும் கொள்வனவு செய்யலாம்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றின் குறைந்தபட்ச கொள்வனவுப் பெறுமதி என்ன?

ரூ. 500/- மற்றும் அதனையடுத்து ரூ. 100/- இன் மடங்குகள்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றிலிருந்து பணத்தை மீளப்பெறுவது எப்படி?

டிக்கிரி அன்பளிப்புச் சீட்டை ஒரு கணக்கில் வைப்புச் செய்ய மட்டுமே முடியும். அதனைப் பணமாக்க முடியாது.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” மூலம் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியுமா?

எந்தவொரு செலான் வங்கிக் கிளையிலும் புதிய டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பிக்க அல்லது தற்போதுள்ள டிக்கிரி கணக்கில் பெறுமதியை வரவு வைக்க மாத்திரமே அன்பளிப்புச் சீட்டைப் பயன்படுத்த முடியும்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றினால் பயனடைபவரின் வயதெல்லை என்ன?

சீட்டு கொள்வனவு செய்யப்படும் திகதியில் பயனடைபவரின் வயது 15க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றின் செல்லுபடியாகும் காலம் என்ன?

வழங்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு அன்பளிப்புச் சீட்டு செல்லுபடியாகும்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றை மீட்பது எப்படி?

காலாவதியான அன்பளிப்புச் சீட்டுக்களை, அவை வழங்கப்பட்ட கிளையில் மாத்திரமே மீட்க முடியும். உரிய பணம் வாடிக்கையாளர் கேட்டுக்கொள்ளும் கிளையொன்றில் வரவு வைக்கப்படும்.

செல்லுப்படியாகும் அன்பளிப்புச் சீட்டை புதிய டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பிப்பதற்குப் பயன்படுத்தலாம் அல்லது அதன் பெறுமதியைத் தற்போதுள்ள டிக்கிரி கணக்கொன்றில் வரவு வைக்கலாம்.

கருமப்பீடங்களில் டிக்கிரி அன்பளிப்புச் சீட்டுக்களை வாங்கும் போது, டிக்கிரி திட்டம் தொடர்பான பரிசுகளையும் வாடிக்கையாளர்கள் சேகரிக்க முடியுமா?

டிக்கிரி திட்டத்திற்கான பரிசுகள் அன்பளிப்புச் சீட்டுக்களுடன் வழங்கப்பட மாட்டாது. எனினும், அன்பளிப்புச் சீட்டுக்களை டிக்கிரி கணக்கொன்றில் வைப்புச் செய்யும்போது, கணக்கு மீதியின் அடிப்படையில் வழங்கப்படும் பரிசுகளைச் சேகரிக்கலாம்.

ஒரு வாடிக்கையாளர் எத்தனை அன்பளிப்புச் சீட்டுக்களைக் கொள்வனவு செய்ய முடியும்?

ஒருவர் எத்தனை சீட்டுக்களையும் கொள்வனவு செய்யலாம்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றை வாங்கும்போது பிள்ளையின் பிறப்புச் சான்றிதழைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டுமா?

கட்டாயமல்ல. ஆனால் புதிய டிக்கிரி கணக்கொன்றில் அதனை வைப்புச் செய்யும்போது பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவது அவசியம்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றில் கொள்வனவுப் பெறுமதி என்ன?

குறைந்தபட்ச பெறுமதி ரூ. 500/- மற்றும் அதன் பின் ரூ. 100/- இன் மடங்குகள்.