Internet Banking Login

கடன் தவணை

l
அம்சங்கள்
  • விளக்கம்
  • தவணைக் கால கடன்கள் குறிப்பிட்ட காரணங்களுக்கான மட்டுமே வழங்கப்படுவதுடன் வழங்கப்படும் நாணயம், தொகை மற்றும் தவணைக் காலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

  • நிதி மற்றும் பிற நன்மைகள்
  • உங்களது பல்வேறு நிதி தீர்வுகளுக்கான ஓர் சிறந்த தீர்வு (வணிக அல்லது தனிப்பட்ட தேவை), மூன்று வருடங்கள் வரை திருப்பி செலுத்தக்கூடிய சௌகரியமான தவணைக் காலம் (வாடிக்கையாளர்களின்/ நீண்ட கால திட்டங்களின் தேவைகளுக்கமைய விதிவிலக்கு வழங்கப்படும்)

    • நிதி மற்றும் பிற நன்மைகள்

      உங்களது பல்வேறு நிதி தீர்வுகளுக்கான ஓர் சிறந்த தீர்வு ( வணிக அல்லது தனிப்பட்ட தேவை), மூன்று வருடங்கள் வரை திருப்பி செலுத்தக்கூடிய சௌகரியமான தவணைக் காலம் (வாடிக்கையாளர்களின் / நீண்ட கால திட்டங்களின் தேவைகளுக்கமைய விதிவிலக்கு வழங்கப்படும்)

    • செலவுகள் (வட்டி, கட்டணம், அறவிடல், தரகுக் கூலி)

      • குறையும் நிதி சமநிலையில் வட்டி விதிக்கப்படுவதுடன் பொருத்தமான வட்டி விகிதம் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
      • வழங்கப்படும் கடன் தொகை மற்றும் பாதுகாப்பு சேவையைப் பொறுத்து, கடன் வழங்கும் ஆவணக் கட்டணம், சட்ட ரீதியான கட்டணங்கள், மதிப்பீட்டு கட்டணம் ஆகியவை பொருத்தமாக இணைக்கப்படும்.
    • தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து பெறுவதற்கான வழிமுறைகள்.

      தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டு, முறையாக நிரப்பப்பட்ட வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பப்படிவத்தை கணக்கு வைத்திருக்கும் கிளையின் முகாமையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    • முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

      • வணிக வாடிக்கையாளர்களைப் பொருத்தவரையில், வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான சொத்துக்கள் அல்லது வேறெந்த கொள்முதல் நடவடிக்கைகளுக்குமான மூலதனம் தவணைக் கடனான வழங்கப்படும்.
      • ஏனைய வாடிக்கையாளர்களை பொருத்தவரையில் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டு வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும் தவணைக் கடன்கள் வழங்கப்படும்.
      • எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை வங்கிக்கு உண்டு. எனினும் வங்கி வசதிகள் நிராகரிக்கப்படுமாயின் அதற்கான காரணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
      • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதாந்த வருமானத்தை ஈட்டும் தகுதிபெறும் வாடிக்கையாளர்களுக்கு தவணைக் கடன்கள் வழங்கப்படும்.
      • வங்கியில் நிதியுதவி கோரும் வாடிக்கையாளர், பணம் தொடர்பிலான பாதுகாப்பின் பொருட்டு வங்கியால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றுவழியினை (பிணையம் / பாதுகாப்பு) வழங்க வேண்டும்.