Internet Banking Login

இலங்கை அரசு பத்திரங்கள்

l
அம்சங்கள்
  • திறைசேரி உண்டியல்கள்

    திறைசேரி உண்டியல்கள் இலங்கை அரசினால் 3,6 அல்லது 12 மாதங்கள் போன்ற குறுகிய கால கடன் திட்டங்களாக வழங்கப்படுகின்றது. திறைசேரி உண்டியல்களுக்கான கழிவு முதலீட்டாளர் குறிப்பிட்ட கழிவுப் பெறுமதியில் கொடுப்பனவு செய்வதுடன் (முதலீட்டு பெறுமதி) முகமதிப்பை முதிர்வின் போது பெறுவார். திறைசேரி உண்டியல்கள் வாராந்த ஏலத்தின் வாயிலாக விநியோகிக்கப்படும்.

  • திறைசேரி பத்திரங்கள்

    திறைசேரிப் பத்திரங்கள் இலங்கை அரசினால் 2 முதல் 20 வருடங்கள் வரையான நீண்ட கால கடன் கருவியாக வழங்கப்படுகின்றது. திறைசேரிப் பத்திரங்கள் கூப்பனை (வட்டி) கொண்டுள்ளதுடன் அரையாண்டு அடிப்படையில் செலுத்தப்படுவதோடு அதன் உரிய தொகை முதிர்ச்சியின் போது திருப்பி செலுத்தப்படும்.

  • Repos

    REPOs என்பது வங்கியானது வாடிக்கையாளரிடமிருந்து திறைசேரி உண்டியல்களுக்கு அல்லது பத்திரங்களுக்கு எதிராக நிதியைப் பெற்றுக்கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இரு தரப்பினரினாலும் பரஸ்பரமாக ஏற்றுக்கொள்ளப்படும் வட்டி விகிதம் ஆகும். திறைசேரி உண்டியல்களுக்கு அல்லது பத்திரங்கள் உங்கள் முதலீடுகளுக்காக ஒதுக்கப்படும் இணைப் பிணையங்களாகும். இது ஆபத்து அற்ற முதலீடு ஆகும்.

  • Reverse Repos

    Reverse Repos என்பது வாங்குபவர் அல்லது வாடிக்கையாளரிடமிருந்து பிணையங்களை குறிப்பிட்ட தொகையில் குறிப்பிட்ட எதிர்கால திகதியில் கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர் அல்லது முகவர் உறுதியளிக்கும் போது ஏற்படுத்தப்படும் உடன்பாடாகும். வாடிக்கையாளரின் தொலைநோக்கில் உடன்பாடு மேற்கொள்ளப்படும் போது Reverse Repos என குறிப்பிடப்படுகின்றது.

  • இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள்

    இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் இலங்கை அரசினால் வெளியிடப்படும் அமெரிக்க டொலரின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஓர் கடன் கருவியாகும். இதை உரிமையாளருக்கு ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை வட்டி வழங்கப்படுவதுடன் உரிய தொகையானது முதிர்வுக் காலத்தின் இறுதியில் வழங்கப்படும். வட்டித் தொகையானது வருடத்திற்கு ஆறு மாத லண்டன் இன்டர் வங்கி வட்டி விகிதத்தில் (LIBOR) கணக்கீடு செய்யப்பட்டு அமெரிக்க டொலரில் வழங்கப்படும். மேலும் விடு மிகுதி தொகையானது ஏல விலைகளின் ஊடாக தீர்மானிக்கப்படுகின்றது.

கணக்கை ஆரம்பிப்பது எப்படி?
  • தகுதி :
  • திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள்
    • நாட்டு நிதி, பிராந்திய நிதி அல்லது பரிமாற்று நிதி உட்பட வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்
    • இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள்
    • குடியுரிமையுள்ள தனிநபர்கள்
    • இலங்கையில் வசிக்கும் அல்லது இலங்கைக்கு வெளியில் வசிக்கும் வெளிநாட்டு குடியுரிமையுள்ளவர்கள்
    • வதிவற்ற இலங்கையர்கள்
    • இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள்
  • Repos & Reverse Repos
    • தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள்
  • இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள்
    • தொழில் வாய்ப்பு மற்றும் வியாபார நோக்கங்களுக்காக இலங்கைக்கு வெளியில் வாழும் இலங்கை பிரஜைகள்.
    • இரட்டை குடியுரிமையுள்ள இலங்கை பிரஜைகள் தமது குடியுரிமைகளை உறுதிப்படுத்துவதுடன் இலங்கைக்கு வெளியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
    • (சட்ட எண் 2000 இன் 43) காப்பு நிறுவன சட்ட கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் – அவர்களது விசேட வெளிநாட்டு நாணய கணக்குகளிலிருந்து நிதி.
    • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வாழும் வெளிநாட்டு பிரஜைகள்
    • இலங்கை அபிவிருத்திப் பத்திரங்கள் அமெரிக்காவிலோ அல்லது அமெரிக்காவில் வாழும் நபர்களுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்பதை நினைவில் கொள்ளவும்.
    • முதலீட்டுச் சபை நிறுவனங்கள் – இலங்கை அபிவிருத்திப் பத்திர முதலீடானது தமது ஏற்றுமதி வருமானத்திலிருந்து பெறப்படவேண்டும்.
  • தேவையான ஆவணங்கள் :
    • திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள்
    • தனிப்பட்ட ஆவணங்கள் கூட்டுறவு நிறுவனங்கள்:
      தேசிய அடையாள அட்டைப் பிரதி பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி
      முதலீட்டாளர் கோரிக்கைப் படிவம் முதலீட்டாளர் கோரிக்கைப் படிவம்
      வாடிக்கையாளர் பதிவு படிவம் வாடிக்கையாளர் பதிவு படிவம்
      தொலைநகல்/மின்னஞ்சல் தொலைநகல்/மின்னஞ்சல்
      KYC படிவம் KYC படிவம்
      இலங்கை பாதுகாப்பு வலைப் படிவம் இலங்கை பாதுகாப்பு வலைப் படிவம்
      விண்ணப்பப் படிவம் விண்ணப்பப் படிவம்
      Customer Agreement அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள்
      நிறுவன நிர்வாகக் குழுவின் தீர்மானம்
      கூட்டிணைவுச் சான்றிதழ்
      கூட்டிணைவு விதிகள் சான்றிதழ் பிரதி
      படிவம் 1 (நிறுவனத்தின் பதிவு)
      முதன்மை மீள் ஒப்பந்தம்
    • Repo
    • முதன்மை மீள் ஒப்பந்தம் முதன்மை மீள் ஒப்பந்தம்
      தேசிய அடையாள அட்டைப் பிரதி பணிப்பாளர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி
      முதலீட்டாளர் கோரிக்கைப் படிவம் முதலீட்டாளர் கோரிக்கைப் படிவம்
      வாடிக்கையாளர் பதிவு படிவம் வாடிக்கையாளர் பதிவு படிவம்
      தொலைநகல்/மின்னஞ்சல் தொலைநகல்/மின்னஞ்சல்
      KYC படிவம் KYC படிவம்
      இலங்கை பாதுகாப்பு வலைப் படிவம் இலங்கை பாதுகாப்பு வலைப் படிவம்
      விண்ணப்பப் படிவம் விண்ணப்பப் படிவம் 
      அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்கள்
      நிறுவன நிர்வாகக் குழுவின் தீர்மானம்
      கூட்டிணைவுச் சான்றிதழ்
      கூட்டிணைவு விதிகள் சான்றிதழ் பிரதி
      படிவம் 1 (நிறுவனத்தின் பதிவு)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

    திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை வெளியிடுவது யார்?

    இலங்கை அரசின் ஓர் முகவரான, இலங்கை மத்திய வங்கியின் பொது கடன் துறையே (CBSL) வாராந்த ஏலத்தின் மூலம் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை வெளியிடுகிறது.

    திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை முதலீடு செய்வது எப்படி?

    முதலீட்டாளர்கள், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை எந்தவொரு வேலை நாளிலும் ஏல விற்பனையில் முதன்மை சந்தையிலுள்ள நிர்ணயிக்கப்பட்ட முகவரின் ஊடாகவோ அல்லது இரண்டாம் நிலை சந்தையிலுள்ள நிர்ணயிக்கப்பட்ட முகவரின் ஊடாகவோ, வர்த்தக வங்கியிலிருந்தோ முதலீடு செய்ய முடியும்.

    திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை விண்ணப்பிப்பது எப்படி?

    • இலங்கை மத்திய வங்கியின் பதிவு பெற்ற முதன்மை வணிகர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் மூலம் எந்த நேரத்திலும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும்.
    • பரிவர்த்தனையின் பின் உங்கள் முகவர் இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் மத்திய வைப்புத் திட்டமுறைமைகளில் அடங்கும் பிணையங்கள் கணக்கினை ஆரம்பிப்பார். இக்கணக்கு சந்தையில் உங்கள் வர்த்தகத்தின் அடிப்படையில் வரவு/பற்று ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

    திறைசேரி உண்டியல்களின் முக்கிய அம்சங்கள் என்ன?

    • முதிர்வு வருமானத்தில் ஈட்டிய தொகை (முகமதிப்பு) முதிர்வின்போது வழங்கப்படும்.
    • இரண்டாம் நிலை சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடியது.
    • குறுகியகால கடன் பத்திரம். (3 முதல் 12 மாதங்கள் வரை).
    • வருவாய் விகிதங்கள் வணிகச் சந்தையினால் தீர்மானிக்கப்படும்.
    • ஆபத்தற்ற உயர் பாதுகாப்பான கடன் பத்திரம்.
    • பங்குகளற்ற வடிவில் வெளியிடப்படும்.
    • 2 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையான கால முதிர்வைக் கொண்டது.

    திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திங்களில் கிடைக்கும் நன்மைகள் யாவை?

    • வருவாய் விகிதங்கள் வணிகச் சந்தையினால் தீர்மானிக்கப்படுவதனால் அதிகபட்ச வட்டியை ஈட்டிக்கொள்ளலாம்.
    • இந்த திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் இரண்டாம் நிலை சந்தைகளில் வர்த்தகம் செய்யக்கூடியதாக இருப்பதால், நீங்கள் சந்தை விற்பனை மூலம் உடனடி பணப் புழக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
    • இறையாண்மை கொண்ட அரசினால் வெளியிடப்படுவதால் முற்றிலும் ஆபத்தில்லாத முதலீடாகும்.

    நான் முதிர்வு வருமானத்தை பெற்றுக் கொள்வது எப்படி?

    வட்டி (திறைசேரி பத்திரங்கள்) மற்றும் முதிர்வு வருமானம் (திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள்) ஆகியவை உங்கள் முகவர்களினால் உரிய நாளில் உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    Repos முதலீடு மூலம் நான் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகள் எவை?

    • கழிவு முறைகளில் முதிர்வுக்கு முன்னர் பணத்தை மாற்ற முடியும்.
    • பிணையுறுதியாக உபயோகிக்கலாம்.
    • பிடித்து வைத்தல் வரி இல்லை.
    • கவர்ச்சிகரமான வட்டி ஈட்டலாம்.

    இலங்கை அபிவிருத்திப் பத்திரங்களின் நன்மைகள்

    கூப்பன் வட்டி விகிதம் அமெரிக்க டொலர்களில் ஆறு மாத கால லண்டன் இன்டர் வங்கி வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே சந்தையில் நிலவும் வட்டியை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பு.

    • அரையாண்டு வட்டிப் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
    • நிலையான வைப்பை விட அதிக இலாபமீட்டலாம்.
    • பரிமாற்ற விகிதத்தில் ஆபத்துக்கள் இல்லை.
    • இலங்கையில் உங்கள் வருமானத்திற்கான முழுமையான வரி விலக்கு.