Internet Banking Login

சிறிய மற்றும் (மைக்ரோ) நுண் துறை முன்னணியாளர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்

l
சௌபாக்கிய கடன் திட்டம்

    இது சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்போடு வழங்கப்படும் கடன் திட்டமாகும்.

    • தகுதிபெறும் திட்டங்கள்

      காணி மற்றும் கட்டிடம் போன்ற அசையா சொத்துக்கள் தவிர்ந்த ஏனைய சொத்துக்களின் மொத்த பெறுமதி 40 மில்லியனுக்கு குறைவாக இருப்தோடு, 5 முதல் 100 வரையிலான தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிளான வியாபாரமாக இருக்க வேண்டும்.

      செலான் வங்கியானது இந்த கடன் திட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் பெறுமதி மிக்க திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும்.

      • புதுமையான திட்டங்களை மேம்படுத்தல்.
      • வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
      • தேசிய பொருளாதாரத்தில் பங்களிக்கும் திட்டங்கள்.
      • பொருட்களின் பெறுமதியை மேம்படுத்தும் திட்டங்கள்.
      • அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட திட்டங்களுக்கு புத்துயிர் அளித்தல்.
      • ஏற்றுமதி சார்ந்த திட்டங்கள்.
      • மேல் மாகாணத்திற்கு வெளியிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்படும் திட்டங்கள்.
      • சுற்றுச்சூழலுக்கு சாதகமான மற்றும் சிநேக பூர்வமான திட்டங்கள்.
      • சுற்றுலா சார்ந்த சிறிய அளவிலான விடுதிகள் தொடர்பான திட்டம்.
      • வேளாண்மையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை பதப்படுத்தல் தொடர்பான திட்டங்கள்.
      • புதிய தொழில்நுட்பங்களைப் கையாளும் திட்டம்.
    • தேவைப்படும் தகைமைகள்

      • இலங்கையில் நிரந்தர வதிவாளராக இருத்தல் வேண்டும்.
      • கடனை மீள்செலுத்தக்கூடிய வருமானத்தை ஈட்டித்தரும் வியாபாரத் திட்டமாக இருத்தல் அவசியம்.
    • அதிகபட்ச கடன் தொகை

      • தேசிய பொருளாதாரத்தில் அதிக பங்காற்றும் திட்டங்களுக்கு 25 மில்லின் ரூபாய்
      • மற்றும் ஏனைய திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.
    • மீள்செலுத்துகைக் காலம்

      5 ஆண்டுகள் மற்றும் 6 மாத மேலதிக காலம்.

    • வட்டி விகிதம்

      8% வ.வ.

    • பிணை பாதுகாப்பு

      வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிணை பாதுகாப்பு வழிமுறை

சிறிய மற்றும் (மைக்ரோ) நுண் துறை முன்னணியாளர் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம். ( SMILE III RF )

    SMILE கடன் திட்டமானது சிறிய மற்றும் மைக்ரோ ஸ்கேல் நிறுவனங்களின் திட்டங்களுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஒத்துழைப்பின் மூலம் வழங்கப்படும் கடன் திட்டமாகும்.

    • தகுதி பெறும் திட்டங்கள்.


      சிறிய மற்றும் நுண்துறை நிறுவனங்களின் காணி மற்றும் கட்டிடம் தவிர்ந்த ஏனைய சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 30 மில்லியன் ரூபாவைவிட குறைவாக இருத்தல் வேண்டும்.


      பின்வரும் உற்பத்திகள் மற்றும் தொழில் துறைகளுக்கு SMILE இன் மூன்றாம் திட்டத்தின் கீழ் கடன் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் தகுதியுண்டு.


      • தேயிலை (பொதியிடல் முறையின் கீழ் பெறுமதி சேர்ப்பனவாக கருத்திற்க்கொள்ளப்படும்.)
      • தென்னை நார்.
      • இறப்பர்
      • காலணி
      • பிளாஸ்டிக்
      • புடவை மற்றும் ஆடை
      • உணவு உற்பத்தி
      • மூலிகைப் பொருட்கள் உற்பத்தி
      • தகவல் தொழில்நுட்பம் (வர்த்தகம் தவிர்ந்த)
      • மாணிக்கம் மற்றும் நகை (புதிய தொழில்நுட்பத்திலான வடிவமைப்ப மேம்பாடு)
      • கைத்தரி மற்றும் கைவினையலங்காரப் பொருட்கள்.
      • தோல் உற்பத்திகள்
      • பொதியிடல்.
      • மட்பாண்ட உற்பத்தி
      • மசாலா பொருட்கள் (தரம்கூடிய)
      • மரப் பொருட்கள்.
      • இயந்திரங்கள், கருவிகள், உலோகப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்தி.
    • அதிகபட்ச கடன் தொகை

      LKR 7,500,000/- ரூபாய்

    • மீள்செலுத்துகைக் காலம்

      10 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டு மேலதிகக் காலம்.

    • வட்டி விகிதம்

      8% வ.வ

    • பிணை பாதுகாப்பு

      வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிணை பாதுகாப்பு வழிமுறை