Internet Banking Login

வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவு

l
அம்சங்கள்

செலான் வங்கி வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவானது (FCBU), தேசிய இனத்தவர் அல்லாத தனிநபர்கள் தேசியமற்ற நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களினால் ஒப்புதல் வழங்கப்பட்ட விசேட அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய வங்கிச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது. இதன் கீழுள்ள கணக்குகள் வெளிநாட்டு நாணயங்களில் பராமரிக்கப்படுகின்றது. வங்கி கொள்கைகளின்படி KYC மற்றும் AML நடைமுறைகள் பூர்த்தியானதுடன் கணக்குகள் ஆரம்பிக்கப்படும். வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவு கணக்;கிலுள்ள நிதி அனைத்தும் உள்ளுர் செலாவணி கட்டுப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்படுவதுடன் உலகின் எப்பாகத்திற்கும் சுதந்திரமாக பரிமாற்றப்படக்கூடியது. அத்துடன் இந்நிதியினை உள்ளுர் ரூபாய் கணக்குகளிற்கு தாராளமாக மாற்றலாம்.

இக்கணக்குகள், முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களினால் ஒப்புதல் வழங்கப்பட்ட விசேட அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான On Shore கணக்குகள் மற்றும் தேசிய இனமல்லாதோருக்கான Off Shore கணக்குகள் என இரு கணக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவின் கீழ்இ உங்கள் நிறுவனத்தினை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் உங்களது தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய நிகரில்லா சேவைகளையும் அனுபவித்திடலாம்.

    • உங்கள் பணத்திற்கு

      வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவு கணக்கில் வைப்பிலுள்ள உங்கள் பணத்திற்கு மாதாந்த வட்டி வழங்கப்படும். (காசோலைப் புத்தகங்கள் வழங்கப்படமாட்டாது, கோரிக்கைகளுக்கமைய பணமீட்டல் அனுமதிக்கப்படும்)

    • உங்கள் பணம்

      உங்கள் பணம் (3,6,12 மாதங்கள்) கால வைப்பு மற்றும் அழைப்பு வைப்பின் அடிப்படையில் வளர்ச்சி காணும்.

    • கடன்கள், மேலதிக பற்று வசதிகள்

      மற்றும் ஏனைய வங்கி வசதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

    • வங்கிப் பரிவர்த்தனைகள்

      டெலிகிராபிக் பணமாற்றம் (TT), கேள்வி வரைவுகள் (DD), பற்றுச்சீட்டு மற்றும் RTGD மூலம் உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் ஏனைய வங்கிகளுடன் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

    • உங்கள் வர்த்தகத்தை விஸ்தரித்திட

      எல்லை தாண்டிய வர்த்தக சேவைகள் (சான்று மற்றும் உத்தரவாதத்துடனானது).

    • அறிக்கைகள் பெற்றுக்கொள்ளல்

      நிலை அறிக்கைகள் மற்றும் நிலுவை உறுதிப்படுத்தல்கள்.

    • கட்டணமற்ற தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள்

      செலான் மின்னணு அட்டைகள் வாயிலான சேவைகள்.

கணக்கை ஆரம்பிப்பது எப்படி?
  • On Shore
  • முதலீட்டுச் சபை (Board of investment) கட்டுப்பாட்டு இருந்து நிறுவனங்கள் மற்றும் சிறப்பு ஒப்புதல் கணக்குகள் ஒப்புதல்.
  • Off Shore
  • தனிநபர்கள் நிறுவனங்கள் வெளிநாடுகளில் பதிவு.
  • Non residents.
  • இலங்கை நாணயச் சபை ஒப்புதல் வேறு பிற குடியிருப்பாளர்.
கருவி கணிப்பான்கள்
வழிகாட்டல்கள் படிவங்கள்
விதிகள் மற்றும் நிபந்தனைகள். கணக்கு ஆரம்பிக்கும் படிவம்.
தொடர்புடைய வங்கிகள். வெளிநாட்டு பணம் அனுப்பும் படிவம் (TT மற்றும் DD)
கடன் விண்ணப்பக் கடிதம்.

மேலதிக விபரங்களைத் தெரிந்துக் கொள்ள வெளிநாட்டு நாணய வங்கிப் பிரிவின் fcbuops@seylan.lk எனும் மின்னஞ்சல் முகவரியை நாடுங்கள் அல்லது 011 245 6 534, 011 245 6 522 இற்கு அழையுங்கள்.