Internet Banking Login

விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு - SFIDA

l
அம்சங்கள்

விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு அல்லது SFIDA ஆனது வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கான வட்டி வருமானம் ஈட்டும் வைப்புக் கணக்காகும்.

    • கணக்கின் வகை

      இந்த கணக்கை சேமிப்பு மற்றும் நிலையான வைப்பாக ஆரம்பிக்க முடியும்.

    • பயன்படுத்தக் கூடிய நாணயங்கள்

      நியமிக்கப்பட்ட நாணயங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு நீங்கள் உங்கள் கணக்கைப் பராமரிக்க முடியும். USD, EUR, JPY, SGD, CAD, HKD, GBP, CHF, AUD, DKK, SEK, NZD

    • சேமித்து பல சலுகைகளைப் பெற்றிடுங்கள்

      25,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு சமனான தொகையை உங்கள் கணக்கில் பராமரிப்பதன் மூலம் 'செலான் திலின சயுர' வழங்கும் ஹோட்டலில் தங்குமிட வசதியை பெற்றுக்கொள்ளுங்கள்.

    • உங்கள் கணக்கை கண்காணிக்க

      உங்கள் செலான் வங்கிக் கணக்குகள், முன்னைய மற்றும் தற்போதைய அறிக்கைகள் அனைத்தையும் செலான் வங்கி இணைய வங்கிச் சேவையினூடாக நீங்கள் கண்காணிக்க முடியும்.

    • வரி விலக்கு

      தற்போதைய விதிமுறைகளின்படி வைப்புத் தொகைக்கான வருமான வரி, பற்று வரி மற்றும் நிறுத்திய வரி ஆகியவை விலக்கப்பட்டுள்ளது.

    • பரந்த வலையமைப்பு

      உங்கள் சௌகரியம் கருதி நாடளாவிய ரீதியில் வலையமைப்புகள் சேவையில் உள்ளன.

    • உலகலாவிய அணுகுமுறை

      உலகம் முழுவதிலுமுள்ள அங்கீகாரம் பெற்ற விசா ATM களில் பணத்தை மீளப்பெற முடியும்.

    • அனுகூலங்கள்:

      • கணக்கு, உரிமையாளரின் விருப்பத்திற்கமைய, கணக்கில் பராமரிக்கப்படும் நாணயத்தை எந்தவொரு நியமிக்கப்பட்ட நாணய அலகிற்கும் மாற்ற முடியும்.
      • வெளிநாட்டு நாணயத்தில் பராமரிக்கப்படுமாயின் பரிமாற்றச் சிக்கல் இல்லை.
      • எந்தவொரு வெளிநாட்டு நாணய முதலீட்டையும் ரூபாய் அலகிற்கு மாற்ற முடியும்.

கணக்கை ஆரம்பிப்பதற்கு
  • தகுதியுடையோர்
    • இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வாழும் வெளிநாட்டு குடியுரிமையுடையோர்.
    • வெளிநாட்டில் வாழும் இலங்கையர்.
    • இலங்கைக்கு வெளியே உள்ளவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்கள்.
    • நாட்டு நிதி, பரஸ்பர நிதிகள் மற்றும் பிராந்திய நிதிகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.
  • கடன்கள்
    • முதலீட்டு நோக்கத்திற்காக வெளிநாட்டு வங்கி அமைப்பின் மூலம் பெறப்பட்ட வைப்புக்கள்.
    • கணக்கு உரிமையாளரின் மூலம் நாட்டிற்;குள் கொண்டுவரப்பட்ட பயணக் காசோலைகள்> வங்கி ஆணைகள் மற்றும் வங்கி குறிப்புகள் வடிவிலுள்ள வெளிநாட்டு நாணயங்கள்.
    • கணக்கிலுள்ள வைப்பிற்கு கிடைக்கும் வட்டி.
  • பற்று வசதி
    • பணம் அனுப்புதல்
    • ஏனைய SFIDA பரிமாற்றம்.
    • இலங்கையில் கணக்கு வைத்திருப்பவருக்கு விதிக்கப்படும் நிலையான கட்டணம். (உ+ம் : பற்று வரி)
வட்டி விகிதங்கள் மற்றும் கட்டணங்கள்.
கருவிகள் மற்றும் கணிப்பாண்கள்
குறிப்புகள் மற்றும் வழிகாட்டிகள் கணிப்பாண்கள் படிவங்கள்
மாற்று வங்கி வழிமுறைகள் செலான் திலின சயுர விண்ணப்பப் படிவங்கள்
தொடர்புகொள்ளுங்கள் நிலையான கட்டண விண்ணப்பப் படிவம்
செலான் வங்கி பிரதிநிதிகள் வங்கியுடன் தொடர்புடைய அல்லது வங்கியின் மூலம் கோரப்பட்ட ஏனைய ஆவணங்கள்.