Internet Banking Login

செலான் டிக்கிரி சேமிப்பு கணக்கு

l
சிறப்பம்சங்கள்

சேமிக்கும் பழக்கத்தினை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமாகும். அதற்கமைய உங்களின் அன்பிற்குரிய குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய மிகவும் பெறுமதியான பரிசாக செலான் டிக்கிரி இனை அறிமுகம் செய்ய முடியும். 1992 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட செலான் டிக்கிரி கணக்கே, சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்குவதை இலங்கையில் அறிமுகப்படுத்திய முதலாவது சிறுவர் கணக்காகும். கவர்ச்சியான வட்டி வீதத்தினை வழங்குவதற்கு மேலதிகமாக தமது சிறுவர் கணக்கு வைப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள புதிய மற்றும் நவீனமான பரிசுகளை வழங்குவதில் செலான் டிக்கிரி என்றும் முன்னோடியாக திகழ்கின்றது. புதிய தலைமுறையின் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செய்து நிதித் சேவைகளை அறிமுகம் செய்வது இந்த கணக்கின் சிறப்பம்சமாகும்.

எவ்வாறு ஆரம்பிப்பது
  • தகைமை

    15 வயதிற்கு குறைந்த சிறுவர்களே ‘செலான் டிக்கிரி’ கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

  • ஆகக்குறைந்த வைப்பு

    வேண்டியதொரு செலான் வங்கி கிளையில் குறைந்தபட்ச வைப்பாக LKR 500/- இனை வைப்புச் செய்து ‘செலான் டிக்கிரி’ கணக்கினை ஆரம்பிக்க முடியும்.

  • தேவையான ஆவணங்கள்

    கணக்கு ஆரம்பிக்கும் போது விண்ணப்பப்படிவத்துடன் பிறப்புச் சான்றிதழின் பிரதியும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கணக்கினை ஆரம்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்காவிடின் பிள்ளையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் அதன் பிரதியை 120 நாட்களுக்குள் வழங்குவதாக கடிதம் ஒன்று சமர்ப்பித்தல் வேண்டும்.

  • கணக்கை யாரால் ஆரம்பிக்க முடியும்?

    பிள்ளையின் பெற்றோர், பாதுகாவலர் அல்லது ஏனைய உறவினர்கள்

  • பணம் வைப்பு செய்யும் முறைகள் எவை?

    அருகிலுள்ள செலான் வங்கிக்கு சென்று பணம், காசோலை, இணைய வங்கி பரிமாறல், நிலையியற் கட்டளை, ‘செலான் டிக்கிரி’ பரிசு வவுச்சர் ஆகியவை மூலம் பணம் வைப்பு செய்யலாம்.

  • அனுகூலங்களுக்கு தகுதி பெறல்

    போனஸ் வட்டியை அதிகரித்து அனுகூலங்களை பெறுங்கள்

    உங்கள் பிள்ளையின் நலன் கருதி இன்றே செலான் டிக்கிரி கணக்கினை ஆரம்பித்து ‘செலான் டிக்கிரி பரிசுகளை வென்று மேலும் பல நன்மைகளை பெறுங்கள்.

வட்டி வீதம் மற்றும் கட்டணங்கள்
மீதி 15 வயதிற்கு குறைந்த 15 வயதிற்கு கூடிய வ.வ.வி
LKR 100 000/- வரையான மீதிக்கு 4.00% 4.00% 4.07%
LKR 100,001 இற்கு மேற்பட்ட மீதிக்கு வழங்கப்படும் போனஸ் வட்டி கீழுள்ள சாதாரண வட்டி வீதங்களுக்கும் செல்லுபடியாகும்.
LKR 100,001 - 200,000/- போனஸ் வட்டி இல்லை 10.00%  
LKR 200,001 - 300,000/- போனஸ் வட்டி இல்லை 15.00%  
LKR 300,001 - 400,000/- போனஸ் வட்டி இல்லை 20.00%  
LKR 400,001 - 500,000/- போனஸ் வட்டி இல்லை 25.00%  
LKR 500,001 - 750,000/- 30.00% 30.00%  
LKR 750,001 - 1,000,000/- 35.00% 35.00%  
LKR 1,000,001 - 1,250,000/- 40.00% 40.00%  
LKR 1,250,001 - 1,500,000/- 45.00% 45.00%  
LKR 1,500,001 - மற்றும் அதற்கு மேற்பட்ட 50.00% 50.00%  
கணிப்பான்கள்

இந்த முறைகளையும் கணிப்பான்களையும் பயன்படுத்தி எவ்வாறு உங்களால் சேமிக்கலாம் என அறிந்து கொள்ளவும்

குறிப்புகள், சிறுகுறிப்புகள் வழிகாட்டல்கள் கணிப்பான்கள் படிவங்கள்
Branch network Seylan Tikiri Gift Calculator Online Application
Tikiri Gift Voucher Withholding Tax Form
News and Media Internet Banking Application
அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

    செலான் ”டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” என்றால் என்ன?

    செலான் “டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” என்பது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு பிள்ளைக்கு அன்பளிப்புச் செய்வதற்காக எமது கிளைக் கருமப்பீடங்களில் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய சீட்டாகும்.

    டிக்கிரி கணக்கை ஆரம்பிப்பதற்கான குறைந்தபட்ச வயதெல்லை என்ன ?

    15 வயதிற்குக்குட்பட்ட பிள்ளைகளுக்காக “செலான் டிக்கிரி” கணக்கை ஆரம்பிக்கலாம்.

    டிக்கிரி கணக்கை ஆரம்பிப்பதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் எவை ?

    • டிக்கிரி விண்ணப்ப படிவத்துடன், பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதியும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டை/சாரதி அனுமதிப்பத்திரம்/கடவுச்சீட்டு.

    செலான் டிக்கிரி கணக்கில் வைப்புக்களைச் செய்வது எப்படி?

    • பணம்
    • காசோலை
    • இணையத்தள வங்கிச்சேவைப் பரிமாற்றம்
    • நிலையான கட்டளை
    • “செலான் டிக்கிரி” அன்பளிப்புச் சீட்டு
    • SLIPS பரிமாற்றம்
    • பண அனுப்பீடு

    டிக்கிரி கணக்குகளைக் ௬ட்டாக ஆரம்பிக்க முடியுமா ?

    இக் கணக்கு பிள்ளையின் பெயரிலேயே ஆரம்பிக்கப்படும்.  ௬ட்டுக் கணக்குகள் அனுமதிக்கப்பட மாட்டா.