Internet Banking Login

செலான் ஷுவர் சேமிப்புக் கணக்கு

l
சிறப்பியல்புகள்

அறிமுகம்

செலான் வங்கியில் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத மேலதிக நன்மைகளையும் சிறந்த வெகுமதிகளையும் வழங்கும் வகையில் “Seylan Sure” Loyalty Scheme மீள அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளின்போது பணச் செலவு ஈடு செய்தல், மற்றும் வெகுமதிகளையும் வங்கியிடமிருந்து பெறுவார்கள். சந்தையிலுள்ள மற்றெந்தப் பரிசுத் திட்டங்களையும் விட கூடுதலான மற்றும் சிறந்த பண வெகுமதிகளை Seylan Sure இப்பொழுது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

  • கணக்கு மீதி ரூ.150,001/- ஐ தாண்டிய பின் பேணப்படும் ஒவ்வொருரூ.50,000/-க்கும் மேலதிகமாக ரூ.5,000/- சேர்க்கப்படும் (60ஆவது பிறந்தநாள் பிரிவு தவிர)
  • 60ஆவது பிறந்தநாள் பிரிவு தொடர்பில், கணக்கு மீதி ரூ.150,001/- ஐ தாண்டிய பின் பேணப்படும் ஒவ்வொரு ரூ.50,000/-க்கும் மேலதிகமாக ரூ.2,500/- சேர்க்கப்படும்
  • ரூ.20,000/- அல்லது அதற்கு மேற்பட்ட மீதியை டிக்கிரி கணக்கில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளுக்கு 25% மேலதிக நன்கொடைத் தொகை வழங்கப்படும். இது 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு மட்டும் செல்லுபடிபாகும்.

பொது நிபந்தனைகள்

  • கணக்கு வைப்பாளர்(கள்) அல்லது அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மட்டுமே இத் திட்டத்தின் கீழ் வெகுமதிக்குத் தகுதி பெறுவார்கள். குடும்ப அங்கத்தவர்கள் என்பது பின்வருபவர்களைக் குறிப்பிடும்.
  • திருமணமானவர் எனின்:
    - வாழ்க்கைத் துணைவர் மற்றும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட திருமணமாகாத பிள்ளைகள்.
    திருமணமாகாதவர்/ விவாகரத்துப் பெற்றவர் எனின்:
    - கணக்கு வைப்பாளர் மட்டும் (பெற்றோர் மற்றும் திருமணமாகாத சகோதரர்களுக்குத் தகுதி கிடையாது).
    தேவையான ஆவணங்கள்:
    திருமணமானவர் எனின் :
    – திருமணச் சான்றிதழ் மற்றும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்.
  • கூட்டுக் கணக்கெனின், பின்வருவன இணைக்கப்பட வேண்டும்:
    வாழ்க்கைத் துணையாளர் அல்லது துணையாளிகளுடனான கூட்டுக் கணக்கு:
    - ஆண்டொன்றிற்கு ஒவ்வொரு பிரிவிலும் 18 வயதிற்குட்பட்ட பிள்ளைகள் உட்பட எந்தவொரு விண்ணப்பதாரரினதும் ஒரு கோரிக்கைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
    • 18 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகள்/ பெற்றோர்கள்/ சகோதரர்கள் அல்லது வேறொரு நபருடனான கூட்டுக் கணக்கு:
    - கூட்டுக் கணக்கின் தரப்பினர் நன்மைகளுக்குத் தகுதி பெறுவார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தினருக்கு அத் தகுதி கிடையாது.

பொது விடயங்கள்/ விளக்கங்கள்:
  • வாடிக்கையாளர் பல கணக்குகளை வைத்திருந்தாலும், ஒரு நிகழ்வு தொடர்பில் ஒரு கணக்கின் பேரில் மாத்திரமே அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.
  • அன்பளிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான ஆவணங்கள் 03 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • நிகழ்வு இடம்பெற்ற 365 நாட்களுக்குள் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு கணக்கு வைப்பாளருக்கு ஒரு கோரிக்கை மட்டுமே அனுமதிக்கப்படும்
  • முன்னைய கோரிக்கை பெறப்பட்ட 365 நாட்களின் பின்பே அதே பிரிவில் இன்னுமொரு கோரிக்கை அனுமதிக்கப்படும்
  • சகல அன்பளிப்புத் தொகைகளும் வாடிக்கையாளரின் அந்தந்தக் கணக்குகளில் வரவுவைக்கப்படும். மகப்பேற்றிற்கான கொடுப்பனவு மட்டும் டிக்கிரி கணக்கில் வரவு வைக்கப்படும்.
  • இ௫வ௫ம் கணக்கு வைப்பாளர்களாக இ௫க்கும் பட்சத்தில், ஒ௫ கோரிக்கை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  • புதிய திட்டம் 2016 ஆகஸ்ட் 01ஆம் திகதியிலி௫ந்து நடைமுறைக்கு வ௫ம்.
  • இந்த அனுகூலத் திட்டத்தை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது.
ஆரம்பிப்பது எவ்வாறு

தகுதி நிபந்தனைகள்:

  • நிகழ்வுக்கு உடனடியாக முந்திய 12 கலண்டர் மாத காலப்பகுதியில் (6 மாதங்கள் அல்ல) மேற்குறிப்பிட்ட கணக்கொன்றில் குறைந்தபட்சம் ரூ.20,000/-ஐ வரவு மீதியாகப் பேணுதல் வேண்டும்.
  • காலப்பகுதியைக் கணிக்கும்போது நிகழ்வு இடம்பெறும் மாதம் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
  • சகல பிரிவுகளிலும் குறைந்தபட்ச கணக்கு மீதி 12 கலண்டர் மாதங்களுக்குப் பேணப்பட வேண்டும்.

Step 1

Have you maintained a Savings or a Current Account, with a minimum balance of LKR 20,000/-
If you haven’t

Open an Account

Step 2

Download the applications

Forms & applications

Step 3

Submit the documents to the account holding branch

Network

கருவிகளும் கணிப்பிடுகையும்
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள் கணிப்பீட்டுச் சாதனம் விண்ணப்பப் படிவம்
வரவு-செலவுத் திட்டமிடல் கருவியுடன் இலக்குகளை அமைத்தல் ‘செலான் SURE’ கணிப்பீட்டுச் சாதனம் Application For Seylan Sure
மாற்று வங்கி முறைகள் வரவு-செலவுத் திட்டமிடல் கருவி Standing Order application
சேமிப்பதற்கான அறிவுரைகள் Withholding Tax

Watch Our Demo Video here