Internet Banking Login

“Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு

l
சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:

தற்கால இளைஞர்களின் வாழ்க்கை முறையை நாம் அறிந்துள்ளதால், “Seylan Seylfie Youth” நடைமுறைக் கணக்கு என்ற தனித்துவமான கணக்கை உங்களுக்காக வடிவமைத்துள்ளோம். உங்கள் தேவைகளை நிறைவேற்றவும் உங்கள் இளமைக்கு வலுவூட்டவும் இக் கணக்கு உதவும்.

    சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:
  • 18 வயதிற்கும் 26 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கை இளைஞர்கள்.

  • குறைந்தபட்ச வைப்புத் தொகை LKR 25,000/-.

  • “Seylan Seylfie Youth” சேமிப்பு கணக்கு வைப்பாளராக இருக்க வேண்டும்.

  • வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவராக அல்லது வாரிசு என்ற முறையில் கிடைக்கவிருக்கும் பெற்றோரின் வியாபாரத்தை நிர்வகிப்பவராக அல்லது எதிர்காலத்தில் பங்காளியாக அல்லது பணிப்பாளராகச் சேர்த்துக்கொள்ளப்பட இருப்பவராக அல்லது பிரபல கம்பனியொன்றில் முகாமைத்துவப் பயிலுநராக அல்லது தொழில் ரீதியான முன்னேற்ற வாய்ப்புடன் கௌரவமான தொழில் ஒன்றைப் புரிபவராக இருக்க வேண்டும்.

  • நன்மதிப்புள்ள நடைமுறைக் கணக்கைப் பேண வாடிக்கையாளருக்கு உள்ள தகுதி பரிசீலனை செய்யப்படும்

  • விசேடமாக வடிவமைக்கப்பட்ட காசோலைப் புத்தகம் கொண்ட நடைமுறைக் கணக்கு.

  • Chip அடிப்படையிலான. வர்த்தகச் சின்னம் பொறிக்கப்பட்ட பற்று அட்டை

  • இலவச Facebook வங்கிச் சேவையும் இணையத்தள வங்கிச் சேவையும்

  • உங்கள் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி இலத்திரனியல் விபரக்௬ற்றுகள்

  • குறைந்த வட்டியில் கடன் வசதிகள் –

    • Seylan Scholar கல்விக் கடன்
    • வியாபாரக் கடன்கள்
    • தனிப்பட்ட கடன்கள்
    • லீஸிங் வசதிகள்
  • வரையறையற்ற மீளப்பெறுகைகள்

  • LKR 15,000/- இற்கு அதிகமாக மாதாந்த வருமானம் பெறுபவருக்கு விசேட Credit Card.

விசேட அனு௬லங்கள்
    விசேட அனு௬லங்கள்

உங்கள் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் நாம் சிறப்பான அன்பளிப்புக்களை வழங்குவோம்

  • 21ஆவது பிறந்தநாள்
  • உயர் கல்வியில் விசேட பெறுபேறு
பிரிவு LKR 20,000/- முதல்
LKR 30,000/- வரை
LKR 30,001/- முதல்
LKR 60,000/- வரை
LKR 60,001/- முதல்
LKR 90,000/- வரை
LKR 90,001/- முதல்
LKR 150,000/- வரை
LKR 150,001/- மற்றும்
அதற்கு மேல்
21ஆவது பிறந்தநாள் அன்பளிப்பு LKR 1,000/- LKR 2,000/- LKR 3,000/- LKR 5,000/- LKR 7,000/- மற்றும் அதற்கு மேல் பேணப்படும் ஒவ்வொரு ரூ. 50,000/-க்கும் மேலதிகமாக LKR 2,000/- வழங்கப்படும். (அதிகபட்சமாக LKR 25,000/-)
உயர்கல்வியில் விசேட பெறுபேற்றிற்கான அன்பளிப்பு LKR 2,000/- LKR. 4,000/- LKR 6,000/- LKR 8,000/- LKR 10,000/- மற்றும் மேலதிகமாக சேமிக்கும் LKR 50,000/-ற்கு மேலதிக அன்பளிப்பு தொகையாக LKR 2,000/- வழங்கப்படும். (அதிகபட்சமாக LKR 25,000/-)
  1. மேற்குறிப்பிட்ட அன்பளிப்புக்களைப் பெறுவதற்கு, விசேட நிகழ்வு இடம்பெறுவதற்கு முந்திய 12 கலண்டர் மாதங்களுக்கு உங்கள் சேமிப்புக் கணக்கில் அல்லது நடைமுறை கணக்கில் குறைந்தபட்ச மீதியாக ரூ. 20,000/-ஐ தொடர்ச்சியாகப் பேண வேண்டும்.
  2. தமது Seylfie சேமிப்பு/ Seylfie நடைமுறை கணக்கு மீதியின் பேரில் கடன் வசதி பெற்ற வாடிக்கையாளர்கள் Seylan Seylfie நன்மைகள் திட்டத்தின் கீழ் அன்பளிப்புக்களைப் பெற முடியாது
  3. தகுதிக் காலப்பகுதியைக் கணக்கிடும்போது நிகழ்வு இடம்பெறும் மாதம் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.
  4. அன்பளிப்புக்களைப் பெறுவதற்கு, 21ஆவது பிறந்த தினம்/உத்தியோகபூர்வ பரீட்சை முடிவு வெளியான திகதியில் இருந்து 03 மாதங்களுக்குள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  5. உயர்கல்விச் சாதனைக்கான அன்பளிப்பு, 12 மாதங்களுக்குக் குறையாத பட்டப்படிப்பு அல்லது அதற்குச் சமமான கற்கை நெறி பூர்த்தி செய்யப்பட்ட பின்பே வழங்கப்படும்.
  6. உதாரணம் - SLIM, CIM, CIMA, ACCA தொழில்சார் டிப்ளோமாக்கள்

  7. கல்விச் சாதனைக்கான அன்பளிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் வெளியிடப்பட்ட திகதி கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்
  8. உயர் கல்விச் சாதனைக்கான பிரிவைப் பொறுத்தவரையில், நிகழ்வு இடம் பெற்ற திகதியிலிருந்து 365 நாட்களுக்குள், ஒரு கணக்கு வைப்பாளர் ஒரு அன்பளிப்பை மட்டுமே கோர முடியும்.
  9. ஒரு கணக்கின் பேரில் மட்டுமே அன்ப்பளிப்பை மட்டுமே பெற முடியும்.
  10. அன்பளிப்புத் திட்டத்தை எவ்வித முன்னறிவித்தலும் இல்லாமல் மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கிக்கு உரிமையுண்டு
  11. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள அன்பளிப்புத் திட்டம் தொடர்பில் ஏதேனும் சர்ச்சை ஏற்படுமாயின், வங்கியின் தீர்மானமே இறுதி முடிவாக இருக்கும்.

செலான் வங்கி பி.எல்.சி, டயலொக் அக்ஸியாட்டா பி.எல்.சி. யுடன் இணைந்து பின்வரும் நன்மைகளை வழங்குகின்றது.

  • விசேட நன்மைகள் கொண்ட டயலொக் SIM இலவசமாக வழங்கப்படும்
  • Seylan Seylfie வாடிக்கையாளர்கள்;, டயலொக் உபகரணங்களை விசேட தவணைக் கொடுப்பனவு முறையிலும் மேலதிக பாவனை வசதிகளுடனும் கொள்வனவு செய்யலாம்
ஆரம்பிப்பது எப்படி?
    ஆரம்பிப்பது எப்படி?
  • வயது எல்லை - 18 வயது முதல் 26 வயது வரை
  • தேவையான ஆவணங்கள்
    • தேவையான ஆவணங்கள்
    • வழங்கப்பட்ட ஆவணத்திலுள்ள வதிவிட முகவரி வேறுபடுமாயின், 3 மாத காலத்திற்குட்பட்ட ஒரு கட்டணப் பட்டியலின் ஆதாரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
    • வங்கியின் நிபந்தனைகளிற்கு அமைவான அறிமுகம்.

    கவனிக்கவும் – எதிர்காலத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதிப்படுத்துவதற்காக, வேறு ஆவணங்களையும் வங்கி கோரக்கூடும்.

  • குறைந்தபட்ச வைப்பு
கணக்கு வகை குறைந்தபட்ச வைப்பு
சேமிப்புக் கணக்கு LKR 2,000/-
நடைமுறைக் கணக்கு LKR 25,000/-
    செலான் சமூக வங்கியியல் சேவை
  1. உங்கள் “Facebook Account” இல் பிரவேசியுங்கள்.
  2. Search barல் Seylan Social Banking என்று டைப் செய்யுங்கள்.
  3. உங்கள் விபரங்களைப் பதியுங்கள். உங்கள் மொபைல் தொலைபேசியில் (உங்கள் கணக்கிற்கென பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசி) ஒரு தடவைக் கடவுச்சொல் (OTP) ஒன்றைப் பெறுவீர்கள்
  4. OTP ஐ பதியுங்கள்.
  5. செலான் வங்கியின் Facebook ஊடாக நீங்கள் இப்போது இலங்கையின் முதலாவது சமூக வங்கியியல் பிரயோகத்தை (Social Banking App) அனுபவிக்கலாம்.
  6. பாவனையாளர் வழிகாட்டி மற்றும் செய்முறை பற்றிய வீடியோ என்பன Facebook பிரயோகத்திலும் நிறுவன இணையத்தளத்திலும் கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட அனு௬லங்களில் எதையேனும் முன்னறிவித்தலின்றி மாற்ற அல்லது நீக்க செலான் வங்கி பூரண உரிமை கொண்டுள்ளது. இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள அனுகூலங்கள் தொடர்பில் ஏதேனும் சர்ச்சை ஏற்படுமாயின், வங்கியின் தீர்மானமே இறுதி முடிவாக இருக்கும்

கட்டணங்கள்
    கட்டணங்கள்
கட்டணங்களின் விபரங்கள் கட்டணங்கள்
நடைமுறைக் கணக்கு
மாதாந்த சேவைக் கட்டணங்கள் (குறைந்தபட்ச மீதிக்குப் பதிலாக) தனிப்பட்ட நடைமுறைக் கணக்கு LKR 250/-
காசோலைப் புத்தகக் கட்டணம் (ஒரு தாளுக்கு) LKR 20/-
ONLINE வங்கிச் சேவைகள்
ATM அட்டை வழங்கல் கட்டணம் Gold / Platinum LKR 500/-, Seylfie LKR 250/-, Others LKR 350/-
ATM அட்டை வருடாந்தக் கட்டணம் LKR 300/-
இணையத்தள வங்கிச் சேவை இலவசம்

SMS வங்கிச் சேவை (ஒரு தொலைபேசிக்கு)

இலவசம்

Submit application