Internet Banking Login

மொபைல் வங்கிச் சேவை

l
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

செலான் வங்கியின் Mobile BankingApp உங்களுக்குத் தேவையான வங்கி வசதிகளை உங்கள் விரல் நுனிகளுக்குக் கொண்டுவரக்கூடிய இலகுவான முறையில் பல்வேறு வங்கிச்

வழங்குகின்றது. Android தொலைபேசிகள் மற்றும் டப்லட்களுக்கு Mobile App வசதி கிடைக்கும்.

Get it on Google Play


வங்கிச் சேவை உங்கள் விரல் நுனிகளில்

உங்களுக்குச் சௌகரியமான எந்தச் சூழலில் இருந்தும் உங்கள் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை இலகுவாகச் செய்துகொள்ளும் வசதியை செலான் வங்கியின் Mobile App வழங்குகிறது. Log in செய்தவுடன் உங்கள் கணக்கு விபரங்களைப் பார்க்கலாம். சமீபத்திய கொடுக்கல் வாங்கல்களின் பட்டியலைப் பார்வையிட ஏதேனுமொரு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் கட்டணப் பட்டியல்களை எங்கும் எப்போதும் உரிய நேரத்தில் செலுத்தலாம்…

நீங்கள் எங்கிருந்தும் உங்கள் கட்டணப் பட்டியல்களை ஒரு தனிச் செயற்பாடு மூலம் செலுத்தலாம். நேரத்தை மேலும் மீதப்படுத்துவதற்கு தன்னியக்க கொடுப்பனவு வசதியை ஏற்படுத்தி, உங்கள் கொடுப்பனவுகளை அட்டவணைப்படுத்துங்கள். உங்கள் கொடுப்பனவு இப்போதே செலுத்தப்பட வேண்டுமா? அப்படியானால்.

கடுகதி விநியோகம் தேவை. கட்டணப் பட்டியல்களை விரைவாகச் செலுத்த, Ad hoc கொடுப்பனவு விருப்பத்தேர்வைப் பயன்படுத்துங்கள்.

உங்களுக்குத் தெரிந்த எவருக்கும் பணத்தை அனுப்பலாம்

இலகுவான வாழ்க்கைக்கு வழிகாட்டும்! செலான் மொபைல் வங்கிச் சேவை மூலம் நீங்கள் இலங்கையின் எந்தப் பகுதியிலுள்ள எவருக்கும் இலகுவாகப் பணத்தை அனுப்பலாம். SMS alert ஊடாக அதனை அவர்களுக்கு அறிவிக்கவும் முடியும். அவ்வாறு செய்வதற்கு அவர்களின் சரியான விபரங்கள் மட்டுமே உங்களுக்குத் தேவை.


Get it on Google Play

கடந்தகால, எதிர்கால கொடுக்கல் வாங்கல்களை அறியலாம்

முன்னைய மற்றும் புதிய கொடுக்கல் வாங்கல்களை ஒரே திரையில் பார்த்தறியலாம். உங்கள் நிதி அலுவல்களைத் தொடர்ந்து கண்காணிக்க செலான் வங்கியின் Mobile App. வழங்கும் உதவி இதுவாகும்.

உங்கள் வசதிக்கேற்ற சேவை

உங்கள் நிதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் சேவை நிலையங்கள் மற்றும் ATMகளின் அமைவிடங்கள், உங்கள் காசோலைகளின் நிலைமை என்பவற்றை அறியவும் காசோலைப் புத்தகத்தைக் கோரவும் கடன் அட்டைச் சேவைகளை அனுபவிக்கவும் செலான் மொபைல் வங்கிச் சேவை வாய்ப்பளிக்கும்.

பூரண பாதுகாப்பு

Mobile app முன்னேற்றகரமான மறைகுறியீட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், இணையத்தள வங்கிச் சேவையைப் போல பாதுகாப்பானது. நீங்கள் சகல அலுவல்களுக்கும் ஒரு இரகசிய அடையாள இலக்கத்தைப் பயன்படுத்தலாம். இரகசியத் தகவல் எதுவும் உங்கள் கைத்தொலைபேசியில் சேமிக்கப்பட மாட்டாது.


Get it on Google Play