Internet Banking Login

செலான் லீஸிங்

l

சிறப்பியல்புகள்

உங்கள் வாகனக் குத்தகை வசதிகளுக்கு சிக்கலற்ற நெகிழ்வுத்தன்மை மிக்க மீள்செலுத்துகைத் திட்டமொன்றினைத் தேடுகின்றீர்களா? போட்டித்தன்மை மிக்க வட்டி வீதங்களோடு, உங்களுக்குக் கட்டுப்படியாகக் கூடிய, உங்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட செலான் லீஸிங், உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றது. பிரத்தியேக அல்லது வர்த்தக பாவனைக்கான வாகனங்கள், இயந்திரங்கள்/ உபகரணங்களைக் கொள்வனவு செய்ய செலான் வங்கியின் லீஸிங் வசதிகள் உதவுகின்றன.

    • அவசரத்துக்குப் பணம்:

      எந்தவொரு நிதித் தேவைப்பாட்டுக்கும் அல்லது செயற்பாட்டு மூலதன தேவைப்பாடுகளுக்கும் உங்கள் சொந்த வாகனத்தின் மூலம் குத்தகை பெறும் வசதி.

    • வாகன மேம்படுத்துகை:

      4 வருட வாகனக் குத்தகையின் 3ஆவது வருடத்தில், அல்லது 5 வருடக் குத்தகையின் 4 ஆவது வருடத்தில், தற்போதுள்ள வாகன குத்தகையின் 150% வரை முன் அங்கீகாரம் பெறப்பட்ட வாகன குத்தகை வசதி.

    • குத்தகை இடமாற்றம்:

      எந்தவொரு வங்கியினதோ அல்லது நிதி நிறுவனத்தினதோ குத்தகையை மீளச் செலுத்த குத்தகை வசதி.

    • கட்டுப்படியான குத்தகை வாடகை:

      மீள் செலுத்துகைத் திட்டத்துக்குப் பொருந்தக்கூடிய வகையில் வாடகையானது மாற்றியமைக்கப்படலாம்.

    • உரிய காலத்துக்கு முன்னர் செலுத்துவதற்கான கட்டணம் இல்லை:

      5 வருட வாகனக் குத்தகையை 4 வருடங்களில் மீள் செலுத்தப்படும்போது அல்லது 4 வருட வாகன குத்தகையை 3 வருடங்களில் மீள் செலுத்தப்பட்டு, புதிய வாகன குத்தகை எடுக்கப்படுவதாயின் எதிர்கால வட்டி விலக்களிக்களிக்கப்பபடும்.

    • காலத்தை நீடிப்பதற்கான வாய்ப்பு:

      குத்தகைக்கு பெறப்பட்ட வாகனத்தின் சந்தை பெறுமதி மீள மதிப்பீடு செய்யப்பட்டு குத்தகையை மீள் புதுப்பிக்கப்படுவதற்கான வசதி.

    • நெகிழ்வூத் தன்மைமிக்க மீள்செலுத்துகைத் திட்டம்:

      உங்கள் வருவாய் அமைப்பினைப் பொறுத்து கடன்பெறுனபரின் பணப்புழக்கத்திற்கேற்ப குத்தகை வசதி மாற்றியமைக்கப்படலாம். இதன் பிரகாரம் கடன் பெறுனர் அதிக வருமானம் பெறும் காலங்களில் அதிக வாடகையை செலுத்துவதன் மூலம் ஏனைய மாதங்களுக்கான வாடகையைக் குறைத்துக் கொள்ளலாம்.



    *நிபந்தனைக்குட்பட்டது

ஆரம்பிப்பது எவ்வாறு

வாகனக் குத்தகை:

  • புத்தம் புதிய வாகனங்கள்
    • - வாகனத்தின் எஞ்சின், செசி இலக்கம் என்பன உள்ளிட்ட வாகனத்தின் விபரங்கள் அடங்கிய விற்பனையாளரின் விலைப்பட்டியல், வங்கியின் முகவரியிடப்பட்டு இணைக்கப்பட வேண்டும். அத்துடன் குத்தகையாகப் பெறப்படவுள்ள தொகையும் குறிப்பிடப்படல் வேண்டும்.
  • பதிவுசெய்யப்படாத, மீள் புதுப்பிக்கப்பட்ட மற்றும் பாவிக்கப்பட்ட வாகனங்கள்
    • விற்பனையாளர்களின் விலைப்பட்டியல் வங்கிக்கு முகவரியிடப்பட வேண்டும்
    • வங்கியினால் அங்கீகரிக்கப்படும். மதீப்பீட்டாளரின் மதிப்பீட்டுப் பெறுமதி
    • வாகனத்தின் பூரண விபரங்களை உள்ளடக்கியதாக, வங்கியின் முகவரியிடப்பட்டதாக மதிப்பீடு அமைதல் வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்
    • தயாரிக்கப்பட்ட வருடத்தில் இருந்து 10 வருடங்களுக்கும் மேற்படாததாக இருத்தல் வேண்டும்
    • வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டினைப் பொறுத்து வாகனத்துக்கான குத்தகை, அதன் மதிப்பீட்டுப் பெறுமதியின் 70% சதவீதத்துக்கும் மேற்படாததாக இருத்தல் வேண்டும்.
    • வங்கியின் முகவரியிடப்பட்ட விற்பனையாளர் விலைப்பட்டியல்

உபகரணங்கள்/ இயந்திரங்களுக்கான குத்தகை வசதி

  • புத்தம் புதிய உபகரணங்களே குத்தகை பெறுவதற்கு உகந்தவையாகக் கருதப்படும்.
  • வங்கியின் முகவரியிடப்பட்ட விற்பனையாளர் விலைப்பட்டியல்
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • விற்பனையாளரின் விலைப்பட்டியல்/ மதிப்பீட்டுக்கு மேலதிகமாக கீழ்க் காணும் ஆவணங்கள் தேவைப்படுகின்றன:
  • தனிநபர்
    • தேசிய அடையாள அட்டையின் பிரதி(கடவுச் சீட்டு/ சாரதி அனுமதிப் பத்திரம்)
    • சம்பள சீட்டு
    • சம்பளத்தை உறுதிப்படுத்தும் தொழில்தருனரின் கடிதம்
    • கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விபர அறிக்கைகள்
    • சேமிப்புப் புத்தகத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
  • நிறுவனம்
    • நிறுவன அமைப்பு மற்றும் பதிவுக் குறிப்புகள்
    • வர்த்தகம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழின் பிரதி
    • பதிவு நிறுவனங்களில் மிகச் சமீபத்தைய விண்ணப்பப் படிவ இலக்கம் 48 பூர்த்தி செய்யப்பட்டதற்கான பிரதி.
    • நடப்பாண்டுக்கான விற்பனைப் புரள்வு வரி செலுத்தப்பட்டதற்கான சீட்டுக்கள்
    • கடந்த 6 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விபர அறிக்கைகள்

Watch Our Demo Video here