Internet Banking Login

செலான் “INCOME SAVER” சேமிப்புக் கணக்கு

l
சிறப்பம்சங்கள்

வருமானம் என்பதைச் சம்பளத்துடன் மட்டுப்படுத்தாமல், மொத்த வருமானத்தையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் பூரண தீர்வுகளை வழங்கும் “செலான் இன்கம் சேவர் கணக்கு” என்ற புதிய திட்டத்தை செலான் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

வங்கியினூடாக நெறிப்படுத்தப்படும் மாதாந்த மொத்த வருமானத்தின்/சம்பளத்தின் அடிப்படையில் செலான் “இன்கம் சேவர்” கணக்கை மூன்று பிரதான பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.

  • பிரிவு A :- மொத்த வருமானம்/சம்பளம் + ஏனைய நிலையான வருமானம் – ரூ.300,000/- மற்றும் அதற்கு மேல்
  • பிரிவு B :- மொத்த வருமானம்/சம்பளம் + ஏனைய நிலையான வருமானம் – ரூ.150,000/- முதல் ரூ.299,999/-  
  • பிரிவு C :- மொத்த வருமானம்/சம்பளம் + ஏனைய நிலையான வருமானம் – ரூ.50,000/- முதல் ரூ.149,999/- 

செலான் இன்கம் சேவர் கணக்கு வைப்பாளர்கள், அவர்களுக்குரிய வருமானப் பிரிவிற்கேற்ப, பின்வரும் அனுகூலங்ளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

விபரம்/சிறப்புக்கூறுகள்

பிரிவு -A

பிரிவு -B

பிரிவு -C

வாடிக்கையாளர் சேவை அலுவலகர் இற்கான பிரத்தியேக சேவை – A,B வருமானம் பெறுவோருக்கு

ஆம்

ஆம்

இல்லை

கணக்கு மீதி ரூ.50,000/- கு அதிகமெனின், ஆண்டுக்கு 1% மேலதிக வட்டி வீதம்

ஆம்

ஆம்

ஆம்

தனிப்பட்ட கடன்* - மொத்த வருமானத்தின் 12 தடவைகள் வரை

ஆம்

ஆம்

ஆம்

வீடமைப்புக் கடன் *

ஆம்

ஆம்

ஆம்

கடன் அட்டை *

ஆம்

ஆம்

ஆம்

பற்று (டெபிற்) அட்டை

பிளட்டினம்

பிளட்டினம்

கோல்ட்

பற்று/கடன் அட்டைக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி SMS அறிவிப்புக்கள்

1ஆவது ஆண்டில் இலவசம்

1ஆவது ஆண்டில் இலவசம்

1ஆவது ஆண்டில் இலவசம்

1ஆவது ஆண்டில் இலவச இணையத்தள /மொபைல் வங்கிச் சேவைகள்  

ஆம்

ஆம்

ஆம்

Visa Multi Currency Travel Card உடன் பயணக் காப்புறுதி இலவசம்*

ஆம்

ஆம்

ஆம்

செலான் ஷுவர் அனுகூலங்கள் *

ஆம்

ஆம்

ஆம்

பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் – கிளைகளில் கிடைப்பதைப் பொறுத்து - 1ஆவது ஆண்டில் கட்டணத்தில் 50% தள்ளுபடி*

ஆம்

இல்லை

இல்லை

  • *விதிகள் மற்றும் நிபந்தனைகள்:
  1. கடன் தொகையானது (தனிப்பட்ட கடன் , வீடமைப்புக் கடன் , கடன் அட்டை ) வங்கியின் கடன் மதிப்பீடு மற்றும் கடன் கொள்கைக்கு அமைவாக நிர்ணயிக்கப்படும். தெளிவான CRIB அறிக்கை, கடன் தகுதி மதிப்பீடு, 3 மாதங்களுக்கு மேல் வங்கியின் ஊடாகச் செலுத்தப்பட்ட வருமானம் என்பன இதில் உள்ளடங்கும்.
  2. ஏதேனும் தகுதி நிபந்தனைகளைக் கொண்டிராத கடன் விண்ணப்பத்தைச் செயற்படுத்துவதற்கு மேலதிக காலம் எடுக்கும்.
  3. வெளிநாட்டுக்குப் புறப்படும் வேளையில் குறைந்தபட்ச கணக்கு மீதியாக 300 அமெரிக்க டொலரை அதற்குச் சமனான  தொகையைக் கொண்டிருக்கும் வீசா பல்தொகுதி நாணய பயண அட்டைகளுக்கு (Multi Currency Travel Card) இலவச பயணக் காப்புறுதி வழங்கப்படும். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக, அட்டை வைத்திருப்பவர்கள் இது பற்றி அட்டை நிலையத்திற்கு (Card Center) அல்லது அட்டை வழங்கிய கிளைக்கு அறிவிக்க வேண்டும்.
  4. பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள்  (Safety Lockers), கிளைகளில் கிடைப்தைப் பொறுத்து, வழங்கப்படும். இதற்கான பிணையாக ஒரு பணத்தொகை வைப்புச் செய்யப்பட வேண்டும்.
  5. “செலான் ஷுவர்” அனுகூலங்களுக்கான குறைந்தபட்ச தகுதி நிபந்தனை:இன்கம் சேவர் கணக்கில் தொடாச்சியாக 12 கலன்டர் மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- ஐ வரவு மீதியாகப் பேண வேண்டும்.
  6. கடன் தகுதி மதிப்பீடு, வருமானம் 3 மாதங்களுக்குக் கணக்கின் ஊடாக அனுப்பப்படுதல் என்பவற்றிற்கு அமையவே சகல கடன்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும்.
  7. ஒப்புக்கொள்ளப்பட்ட வருமானம் கணக்கின் ஊடாக அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை அனுசரிக்காத கணக்குளை இனங்காண்பதற்குக் காலாண்டுதோறும் மத்தியில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கணக்கு மீள்வகைப்படுத்தப்படும்.
  8. முன்னறிவித்தலின்றி அனுகூலத் திட்டத்தை/பிரிவை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.
ஆரம்பிப்பது எப்படி
  • தகுதி
    • 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான இலங்கைப் பிரஜைகள்.
  • இன்கம் சேவர் கணக்கிற்குத் தேவையான ஆவணங்கள்:
    • தேசிய அடையாள அட்டை
    • முகவரியானது ஏதேனும் ஆவணத்திலுள்ளதைவிட வித்தியாசமெனின், 3 மாதங்களுக்குட்பட்ட கட்டணப் பட்டியல் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கவனிக்கவும்: சிறந்த வாடிக்கையாளர் சேவையை உறுதிப்படுத்துவதற்கு இந்த விடயம் தொடர்பான வேறேதும் ஆவணங்களையும் எதிர்காலத்தில் வங்கி கோரக்கூடும்.

  • குறைந்தபட்ச வைப்பு
  • கணக்கு வகை

    தொகை

    சகல பிரிவுகளிலுமான (A,B,C) விபரக்கூற்று அல்லது கணக்குப் புத்தகக் கணக்குகள்

    LKR 2,000/-

Interest Rates Fees
  • Interest Rate

Account Balance

Rate (%) p.a.

AER

Below LKR 999/-

0.00%

 

LKR 1,000/- to LKR 9,999/-

2.00%

 

LKR 10,000/- to LKR 49,999/-

3.50%

 

LKR 50,000/- and above

4.5%

 

See all Interest Rates>>>

  • கட்டணங்கள்

கட்டண விபரங்கள்

கட்டணம்

இணைய வங்கிச் சேவைகள்

ATM அட்டை வழங்கல் கட்டணம்

கோல்ட்/பிளட்டினம் – LKR 500/-

ATM அட்டை வருடாந்தக் கட்டணம்

LKR 300.00

இணையத்தள வங்கிச் சேவை

இலவசம்

SMS Alert

இலவசம்

சகல விதிப்பனவுகளையும் பார்க்கவும் >>>

ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும்
  • ஆலோசனைகள்

ஆலோசனைகள்

கணிப்பு வசதிகள்

படிவங்கள்

பிரச்சினைகளற்ற சேமிப்புக்கு 5 ஆலோனைகள்

செலான் ஷுவர் கணிப்பீடு

உங்கள் சேமிப்பு விண்ணப்பத்தைச் சமார்பிக்கவும்

உங்கள் கடன் அட்டையிலிருந்து அதிக நன்மை பெறும் வழி

கடன் கணிப்பீடு

விதிகள் மற்றும் நிபந்தனைகள் – தனிப்பட்வை

இணையத்தள வங்கிச் சேவைக்கான பாதுகாப்பு உத்தரவாதம்