Internet Banking Login

செலான் வீட்டுக் கடன் (Seylan Home Loans)

l
சிறப்பம்சங்கள்

சொந்தத்தில் வீடொன்றை வைத்திருக்க முடிவது வாழ்க்கையில் எவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு பாக்கியமாகும். வீடொன்றைச் சொந்தமாக்கும் உங்கள் கனவை நனவாக்க, கட்டுப்படியான மற்றும் இலகுவான வீடமைப்புக் கடன்களை செலான் “ஹோம் லோன்ஸ்” வழங்குகின்றது.

மிகக் குறைந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஐந்து இலட்சம் ரூபாய் முதல் நூறு மில்லியன் ரூபாய் வரையிலான (ரூ. 500,000 – ரூ. 100,000,00) செலான் “ஹோம் லோன்” ஒன்றை நீங்கள் பெற முடியும். செலான் “ஹோம் லோன்” வீடமைப்புக் கடன்கள் கவர்ச்சியான வட்டியிலும் ஆலோசனைச் சேவைகளுடனும் வழங்கப்படுகின்றன.

அது மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் தமது வயதிற்கும் மீளளிப்புத் திறனுக்கும் ஏற்ப 25 ஆண்டுகள் வரை நீடிக்கும் மீளளிப்புத் திட்டங்களில் ஒன்றைத் தெரிவு செய்துகொள்ளலாம்.

ஒவ்வொருவரின் வசதிக்கும் விருப்பத்திற்கும் தேவைக்கும் உகந்த கடன் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும் நிறுவனமொன்றில் வேலை செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு மிகப் பொருத்தமான வீடமைப்புக் கடனை செலான் வங்கி வழங்கும்.

    • உங்கள் தேவையை நிறைவு செய்யுங்கள்

      உங்களை அன்புடன் அரவணைக்கும் செலான் வங்கி, உங்கள் கனவு இல்லம் நனவாக தொடர்ந்தும் செலான் சிரி நிவச வீடமைப்புக் கடன் வசதியினை கவர்ச்சிகரமான வட்டி மற்றும் பல விசேட வரப்பிரசாதங்களுடன் வழங்குகிறது.

    • நோக்கம் :

      வீடொன்றை கொள்வனவு செய்ய அல்லது நிர்மாணித்திட, காணியைக் கொள்வனவு செய்ய, தற்போதைய வீட்டை புதுப்பிக்க, விரிவாக்கம் அல்லது பூர்த்தி செய்ய, வீட்டுத் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றைக் கொள்வனவு செய்ய, தற்போதைய வீடமைப்பு கடனை சீர் செய்ய என்பவற்றிற்கு உதவும்.

    • திருப்பிச் செலுத்தல் :

      பெறுநரின் வயதினை அடிப்படையாக கொண்டு அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை.

    • கடன் தொகை

      விண்ணப்பதாரியின் மீள் செலுத்தும் ஆற்றல் மற்றும் சொத்தின் பெறுமதியின் அடிப்படையில் குறைந்தபட்சம் LKR 500,000/- தொடக்கம் அதிகபட்சமாக LKR 100/- மில்லியன் வரை வீட்டுக் கடனாக பெற முடியும்.

    • தகைமை:

      • ஊதியம் பெறுபவர்
      • நிபுணர்கள்
      • வர்த்தகர்கள்
      • வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்
      • இணைந்த பெறுநர்கள்
        • வாழ்க்கைத் துணையுடன்
        • பெற்றோர் 18 வயதிற்கு மேற்பட்ட மகன்/மகள் உடன் இணைந்து
    • வீட்டுத் தொகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றைக்

ஆரம்பிப்பது எப்படி?
  • Simple Steps for a Home Loan
  • Find out how much you could borrow

    Two minutes with our Loan Calculator to make your decision making process easy.

    Complete your application

    You can download your Seylan Home Loan application form

    Online Banking

    Apply for our internet banking and monitor your settlements from home.


வட்டி விகிதங்கள் கட்டணங்களும்
  • வட்டி வீதங்கள் (w.e.f. 25.02.2019)


  • Period Fixed Special rate for permanent employees with salary assignment
    1 year
    14.25%
    14.00%
    2 years
    14.25%
    14.00%
    5 years
    14.25%
    14.00%
    10 years
    15.75%
    15.50%
*குறிப்பு : சந்தை நிலைக்கு ஏற்ப வீதங்களில் மாற்றம் நிகழலாம்.

See all Interest Rates>>>

வீடமைப்புக் கடன் கட்டணங்கள்
செயற்படுத்தல் கட்டணம் கடன் தொகையில் x 0.5%
குகைந் பட்சம் LKR 5,000/-
௬டியபட்சம் LKR 50,000/-
அடைமானப் பிணை கடன் தொகை
LKR 3,000,000/- வரை கடன் தொகையில் x 1% ஆகக்௬டியதாக LKR 30,000/-
LKR 3,000,000/- முதல், LKR 10,000,000/- வரை LKR 30,000/- + எஞ்சிய கடன் மீதியின் பெறுமதிக்கு x 0.5% உ+ம். கடன் தொகை = ரூ. 5 மில்லியன் எனின், கட்டணங்கள் = LKR 30,000/- + (ரூ. 2 மில்லியன் x 0.5%)
LKR 10,000,000/-க்கு மேல் LKR 65,000/- + எஞ்சிய கடன் மீதியின் பெறுமதிக்கு x 0.25% உ+ம். கடன் தொகை = ரூ. 12 மில்லியன் எனின், கட்டணங்கள் = LKR 65,000/- + (ரூ. 2 மில்லியன் x 0.25%)
பெ.சே.வ (VAT) அடைமானக் கட்டணங்கள் x 15%
அடைமானப் பிணை கட்டணம் = அடைமானக் கட்டணங்கள் +VAT
பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணம் பெறுமதி மதிப்பீட்டு + பயணக் கட்டணங்களில் தங்கியுள்ளது. உ+ம். கடன் தொகை = LKR 2,000,000/- எனின், பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணம் = LKR 2,000/- + பயணக் கட்டணங்கள்
உறுதிப்பத்திரம் தேடுவதற்கான கட்டணங்கள் வெளியிலிருந்து வங்கியினால் அமர்த்தப்படும் சட்டத்தரணிகள் விதிக்கும் கட்டணங்களுக்கு அமைவாக.
முத்திரை வரி ஒரு வீட்டை வாங்குதல் அல்லது கட்டுதல் LKR 3,000,000/-க்கு கீழ் கட்டணம் இல்லை
LKR 3,000,000/-க்கு மேல் கடன் தொகையில் x 0.1%
பரிமாற்றப் பத்திரங்களுக்கு LKR100,000/- வரை பரிமாற்றப் பத்திரப் பெறுமதியில் x 3%
LKR100,000/-க்கு மேல் பரிமாற்றப் பத்திரப் பெறுமதியில் x 4%
காப்புறுதி கொள்கைகள் உறுதிப்பத்திரக் காப்புறுதி மதிப்பீட்டுத் தேவையின் பேரில்
ஆயுள் காப்புறுதி கட்டாயமானது
தீ காப்புறுதி வீடொன்றை வாங்கும் வேளையில் (*பூர்த்தி செய்யப்பட்டது அல்லது நிர்மாணிப்பிலுள்ளது.)

See all Service Charges>>>

FAQs

எவ்வகையான தேவைகளுக்கு வீடமைப்பு கடனை என்னால் பெற முடியும்?

  • வீடொன்றை கொள்வனவு செய்ய அல்லது நிர்மாணிக்க
  • காணியொன்றை கொள்வனவு செய்ய
  • தற்போதைய வீட்டை புதுப்பிக்க, விரிவாக்கம் செய்ய அல்லது பூர்த்தி செய்ய
  • அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை கொள்வனவு செய்ய

யாரால் வீடமைப்பு கடனை பெற விண்ணப்பிக்க முடியும்?

  • ஊதியம் பெறும் ஊழியர்கள்
  • நிபுணர்கள்
  • வர்த்தகர்கள்
  • வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்
  • இணைந்த பெறுநர்கள் – வாழ்க்கைத்துணை, பெற்றோர் 18 வயதடைந்த மகன்/மகளுடன்

மீளவும் செலுத்தும் கால வரையறை எவ்வளவாக இருக்கும்?

  • 25 ஆண்டுகள் (60 வயதாகும் போது கடனை முழுமையாக செலுத்த வேண்டும்.)

கடன் பெற்றுக் கொள்ள பாதுகாப்பு உத்தரவாதம் தேவையா?

ஆம்
  • வீடு அல்லது சொத்து மீதான அடமானம்
  • காணி மீதான அடமானம்

வீடமைப்பு கடனை பெற்றுக் கொள்ள தேவையான ஆவணங்கள்?

  • வருமானம் பற்றிய விபரம்
  • தலைமை உறுதிப்பத்திரம் மற்றும் அனுமதிக்கப்பட்ட காணி அளவை திட்டம்
  • உள்ளுர் அதிகார சபைகளின் வீதி, உரிமை மற்றும் கட்டிட நிர்மாணங்கள் பற்றிய அனுமதி
  • கடந்த காலாண்டிற்கான வரிப் பற்றுசீட்டு
  • சட்ட அனுமதிகள்
  • அனுமதிக்கப்பட்ட தொடர்மாடித் திட்டம் மற்றும் வங்கி சார்பான அதிகாரமளிக்கும் ஒப்பந்தம்