Internet Banking Login

செலான் ஃபக்டரிங்

l
உங்கள் வியாபார வளர்ச்சிக்கு இலகுவான நிதி வசதியை தருகிறது
    செலான் ஃபக்டரிங் – உங்கள் வியாபார வளர்ச்சிக்கு இலகுவான நிதி வசதியை தருகிறது

செலான் ஃபக்டரிங் மூலம் விலைப்பட்டியல்களுக்கான பணத்தை விரைவில் பெறுங்கள்.

  • 85% வரை முற்பணம்
  • கடன் இன்றி தொழிற்படு மூலதனம்
  • விலைப்பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்டதும் 24 மணிநேரத்திற்குள் நிதி வசதி

செலான் ஃபக்டரிங் ஒரு நேரடியான வசதியாகும். நீங்கள் உங்களது விலைப்பட்டியலை வழமை போல சமர்ப்பியுங்கள். விலைப்பட்டியலின் பெறுமதியில் 85% ஆன கொடுப்பனவை நாம் 24 மணிநேரத்திற்குள் வழங்குவோம்.

விலைப்பட்டியல் செலுத்தப்பட வேண்டிய நேரத்தில் நாம் உங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து கொடுப்பனவைச் சேகரித்து, ஏதேனும் கட்டணங்கள் இருந்தால் அவற்றைக் கழித்துக்கொண்டு, மீதியை உங்களுக்கு வழங்குவோம்.

    சிறப்பம்சங்கள்:
  • உங்கள் வியாபாரத்திற்குப் பொருத்தமான பல்வேறு திட்டங்கள்

    ஃபக்டரிங் வசதியின் கீழ் நாம் பின்வரும் சேவைகளை வழங்குகிறோம். உங்கள் வியாபாரத்திற்குத் தொழிற்படு மூலதனத்தைத் திரட்ட மிகப் பொருத்தமான சேவையை நீங்கள் தெரிவு செய்யலாம்.

    1. கடனாளிக்கு “recourse” கொண்ட ஃபக்டரிங் (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி)
    2. கடனாளிக்கு “recourse” அற்ற ஃபக்டரிங் (உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி)
    3. விலைப்பட்டியல் தள்ளுபடி
    4. பின் திகதியிட்ட காசோலை தள்ளுபடி
  • பிணைகள் தேவையில்லை

    சேவையைப் பெறுவதற்குப் பிணையாக சொத்துக்கள் எதனையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை


  • தொழிற்படு மூலதன நிலையை முன்னேற்ற உதவும்

    வர்த்தக வருமதிகளில் முடக்கப்பட்ட பணத்தை விடுவிப்பதற்கு ஃபக்டரிங் உதவும். விநியோகச் சங்கிலித்தொடர் நன்கு செயற்படுவதற்கு நம்பிக்கையான தொழிற்படு மூலதனப் பரிமாற்றல் முக்கியமானதாகும். விலைப்பட்டியல் பெறுமதியில் 85% விடுவிக்கப்படுவதால், வர்த்தக வருமதிகளில் பணத்தை முடக்காமல், விலைப்பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதுமே பணத்தை ரொக்கமாகப் பெற்று, அதனை உங்கள் அன்றாட அலுவல்களுக்குப் பயன்படுத்தவும் உங்கள் வழங்குநர்களுக்கு நேரகாலத்துடன் கொடுப்பனவுகளைச் செலுத்தி, அவர்களுடன் நன்கு பேரம்பேசவும் முடியும்.

  • அனைத்தும் உள்ளடங்கிய சேகரிப்பு மற்றும் பேரேட்டு முகாமைத்துவம்

    உங்கள் வியாபார முறையை நன்கு புரிந்துகொள்வதற்காக, ஆரம்பத்திலிருந்தே பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் ஒருவர் உங்களுடன் நேருக்குநேர் தொடர்புகொண்டு செயற்படுவார்.

    விலைப்பட்டியல் செலுத்தப்பட வேண்டிய நேரத்தில், எமது அனுபவம் வாய்ந்த அலுவலர்கள், உங்கள் சார்பில், கொள்வனவாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரிப்பார்கள். ஆகவே, உங்கள் அலுவலர்கள் பணச் சேகரிப்பில் நேரத்தை வீணாக்காமல் வியாபார வளர்ச்சியில் கவனத்தைச் செலுத்த முடியும்.


  • கடன் அற்ற பணப் பரிமாற்றல்

    ஃபக்டரிங் ஒரு கடன் அல்ல. எனவே, அது உங்கள் ஐந்தொகையில் ஒரு பொறுப்பாக இருக்காது. அதாவது, ஐந்தொகை தெளிவாக இருக்கும். நீங்கள் மாதாந்தம் கடன் தவணைப்பணம் செலுத்தவும் தேவையில்லை

  • மன அழுத்தங்களிலிருந்து விடுதலை

    உங்கள் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உங்கள் வாடிக்கையாளர்களின் பணம் கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. தாமதக் கட்டணங்கள் அல்லது சேதக் கடன் பற்றிய கவலை எதுவுமின்றி உங்கள் “பில்” கொடுப்பனவுகள், சம்பளக் கொடுப்பனவுகள் மற்றும் வரிகளை உரிய வேளையில் செலுத்தலாம்.

    ஆரம்பிப்பது எப்படி:

அருகிலுள்ள கிளையுடன் பேசுங்கள்

எமது ஃபக்டரிங் அலுவலர்ளைச் சந்தித்து, விண்ணப்பத்தை சமர்ப்பியுங்கள்

அங்கீகாரத்தின் பின் ஃபக்டரிங் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுங்கள்

விலைப்பட்டி-
யல்கள்/-
காசோலைகளை-
அனுப்பவும் பணத்தைப் பெறவும் தொடங்குங்கள்

no faqs found yet