Internet Banking Login

தனிப்பட்ட திட்டங்கள்

l

நாளைய நல்வாழ்வுக்காக இன்று சேமியுங்கள். உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் வட்டி தரும் சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து உங்கள் எதிர்காலத் திட்டங்களை வெற்றிகரமாக்குங்கள்

1. சேமிப்பு கணக்கு

நாம் உங்கள் சேமிப்பு முயற்சிகளுக்கு உதவுவதுடன், உங்கள் வாழ்கையின் விசேட சந்தர்ப்பங்களில் வெகுமதிகளையும் வழங்குவோம்.

வயது 0+15 - “செலான் டிக்கிரி” கணக்கு, சிறு பிள்ளைகளுக்கு ஏராளமான நன்மைகளைத் தரும். கணக்கு மீதியைப் பொறுத்து உங்கள் பிள்ளைகள் கவர்ச்சியான அன்பளிப்புக்கள், போனஸ் வட்டி என்பவற்றைப் பெறுவார்கள். அத்துடன், வேறு பல அனு௬லங்களும் ஊக்குவிப்புச் சலுகைகளும் வழங்கப்படும்.

வயது 18+ “சாதாரண சேமிப்புக் கணக்குகள்” கிரமமாகச் சேமிக்கும் வாடிக்கையாளர்களுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இசைவான மற்றும் பயன்தரும் கணக்கொன்றை நீங்கள் தேடினால், செலான் சாதாரண சேமிப்புக் கணக்கை அல்லது செலான் 2 in 1 கணக்கை தெரிவு செய்யுங்கள். 2 in 1 கணக்கு என்பது உங்கள் தேவைகளை நிறைவு செய்வதற்கு சேமிப்புக் கணக்கினதும் நடைமுறைக் கணக்கினதும் நன்மைகளை ஒருங்கே கொண்ட ஒரு தனித்துவமான கணக்காகும்.

“செலான் இஹலின் இஹலட்ட” என்பது அதிக வட்டியையும் வரையறையற்ற மீளப்பெறுகை வசதிகளையும் வழங்கும் ஒரு சேமிப்புக் கணக்காகும்.

வருமானம் என்பதைச் சம்பளத்துடன் மட்டுப்படுத்தாமல், மொத்த வருமானத்தையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் பூரண தீர்வுகளை வழங்கும் “செலான் இன்கம் சேவர் கணக்கு” என்ற புதிய திட்டத்தை செலான் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

2. நடைமுறைக் கணக்கு

தனிப்பட்ட மற்றும் வியாபாரம் சார்ந்த உங்கள் தேவைகளுக்கு உகந்த பல நடைமுறைக் கணக்குகளை செலான் வங்கி கொண்டுள்ளது. உங்களுக்கு மேலதிக பணம் கிடைக்கும் போது 2 in 1 நடைமுறைக் கணக்கில் சேமியுங்கள்.

3. வெளிநாட்டு நாணயக் கணக்கு

இலங்கையில் வதிவோர் மற்றும் வதியாதோருக்கென, போட்டி அடிப்படையிலான வட்டி வீதங்களையும் அநேக அனு௬லங்களையும் கொண்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் பலவற்றை செலான் வங்கி வழங்குகிறது. வதிவோர் வெளிநாட்டு நாணய (RFC) கணக்கு, வதியாதோர் வெளிநாட்டு நாணய (NRFC) கணக்குகள், விசேட வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு (SFIDA) வெளிநாட்டு நாணயமாற்று சம்பாதிப்போர் கணக்கு (FEEA),வதியாத வெளிநாட்டு பிரஜைகளுக்கான கணக்கு (NRNNFA) என்பன அவற்றுள் சிலவாகும். இவற்றைக் தவிர, RNNFC, FCISPE, OIA, SIA, SFNA, FCBU கணக்குகளும் உள்ளன.

4. கால வைப்பு

முதலீட்டுக் காலம் 7 நாட்களாக இருந்தாலும் 5 வருடங்களாக இருந்தாலும் உங்கள் முதலீட்டுக்கு பல விருப்பத்தேர்வுகளை வங்கி வழங்குகின்றது. பொதுவான முதலீட்டுக் காலம் 30 நாட்கள் (1 மாதம்), 90 நாட்கள் (3 மாதங்கள்), 180 நாட்கள் (6மாதங்கள்), 365 நாட்கள் (1 வருடம்), 2 வருடங்கள், 4 வருட சக்தி FD, 5 வருட ஸ்டார் என்ற வகையில் வேறுபடும். அதே சமயத்தில், Flexi மூலம் உங்கள் முதலீட்க் காலத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ளவும் முடியும்.

5. செலான் அனு௬லத் திட்டங்கள்

எமது விசுவாசமான வாடிக்கையாளர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளவும் கஷ்ட காலங்களில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் இத் திட்டங்கள் இடமளிக்கின்றன. Seylan Sure என்பது ரூபாய் சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கான அனு௬லத் திட்டம். Thilina Sayura என்பது NRFC மற்றும் RFC வாடிக்கையாளர்களுக்கான அனு௬லத் திட்டம். Harasara Benefit என்பது 55 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான அனு௬லத் திட்டம்.

6. ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம்

தொழில் நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் மனிதசக்தி முகவர்களுக்கென பல்வெறு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் உள்ளது.

7. அடகுச் சேவை

உங்களுக்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டு, அவசர பண உதவி தேவைப்படும் வேளைகளில் செலான் அடகுச் சேவை நம்பிக்கையான, பாதுகாப்பான, விரைவான தீர்வை வழங்கும்.

8. ஏனையவை

ஏனைய பெறுமதி சேர்ப்புக்கள்

அன்பளிப்புச் சீட்டுக்கள் - உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வழங்குவதற்காக சிறந்த அன்பளிப்புச் சீட்டு ஓன்றைச் தேடுகிறீர்களா? செலான் டிக்கிரி அன்பளிப்புச் சீட்டுக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு வழங்க மிகச் சிறந்தவையாகும்.

கடன்கள் - உங்கள் தேவைகளுக்கேற்ப பல்வேறு தனிப்பட்ட, வீடமைப்பு, வியாபாரம், SME, குத்தகை மற்றும் முதலீட்டு வர்த்தக கடன்களை நாம் வழங்குகின்றோம்.

பாதுகாப்புப் பெட்டகங்கள் - உங்கள் பெறுமதிமிக்க பொருள்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எமது பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் சிறந்த வழியாகும்.

பண அனுப்பீடுகள் - வெளிநாட்டிலுள்ள உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் பணத்தைப் பெற்றுக்கொள்ள இச் சேவை உதவும்.