Internet Banking Login

செலான் வங்கி தனிநபர்களுக்கான கடன்

அம்சங்கள்

பண நெருக்கடி ஏதும் இல்லாமல் மங்களகரமான திருமணமொன்றை நடத்தவோ, நீண்ட தூர சுற்றுலா செல்லவோ, பிள்ளைகளின் உயர்கல்வியில் முதலீடு செய்யவோ இருக்கும் உங்கள் விருப்பங்களை அடைவதற்கு நீங்கள் நீண்ட காலம் நிற்க வேண்டியதில்லை. செலான் வங்கியின் தனிநபருக்கான கடனைப் பெறுவதன் மூலம் அவற்றை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்களது தனிப்பட்ட தேவைகளையும், மீள் செலுத்தும் தகுதியையும் கருத்தில் கொண்டு, உங்களது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து சிறப்பான சேவையையும் வழங்க நாம் தயாராக உள்ளோம்.

 • எந்தவொரு தேவைக்கும் கடன் வசதி

 • மாதாந்த சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு கடன் சேவை

 • LKR 200,000/- முதல் LKR 5,000,000/- வரையிலான கடன் தொகை

 • ஆக்க கூடியது 7 வருடம் வரையிலான நெகிழ்வான மீள் செலுத்தும் காலம்

 • கவர்ச்சியான வட்டி வீதம்

 • குறைந்தளவான ஆவணத் தேவை

விண்ணப்பிப்பது எப்படி
 • தகைமை *
  • 20 – 60 வருடம் மட்டுமான வயதெல்லை (ஓய்வு பெற முன்னர் கடன் செலுத்தப் பட வேண்டும்)
  • குறைந்தளவு ரூ.50,000 வரையிலான நிலையான மாதாந்த வருமானம்.
  • கடன் செலுத்துகின்ற முழுமையான காலத்திற்கும் மாதாந்த சம்பளம் உங்கள் செலான் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப் பட வேண்டும்.
  • நிரந்தரமானதும் உறுதிபடுத்தப்பட்டதும் 12 மாதங்கள் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ஊழியர்கள்.
  • CRIB இல் 100% சீரான நிலைமை. கடந்த 2 வருட காலத்தில் 90 நாட்களுக்கு மேலாக மோசற்ற பெறுபேறு.
  • ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழில்வழங்குனா் பட்டியலில் இருக்க வேண்டும். (மேலதிக தகவல்களுக்கு உங்களது அருகிலுள்ள செலான் வங்கிக் கிளை அல்லது 011-200 8888 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.)
 • தேவையான ஆவணங்கள் *
  • செல்லுபடியான தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது வாகன ஓட்டுனர் சான்றிதல்
  • வேலையின் நிரந்தர நிலைமை தொடர்பாக தொழில் அதிபரின் உறுதிச் சான்றிதல்
  • வருமானம் தொடர்பான ஆதாரம் - கடைசியாகக் கிடைத்த சம்பளச் சீட்டு, வங்கிக் கூற்று, கடைசி மூன்று மாதங்களுக்கான கட்டணக் கொடுப்பனவு (டிடைடiபெ pசழழக) ஆதாரம்

* தகுதி நிபந்தனைகளிலிருந்து ஏதேனும் விதத்தில் வித்தியாசப்படும் ஏதேனும் கடனைச் செயற்படுத்துவதற்கு மேலதிக நேரம் எடுக்கும்.

 • வட்டி வீதங்கள்
Period Professionals & Premium Companies Income / Salary LKR 300,000/- & Above Professionals & Premium Companies Income / Salary LKR 100,000/- to LKR 299,999/- Salary Category Salary Category
LKR 100,000/- and above Rate P.A % From LKR 50,000/- upto LKR 99,999/- Rate P.A %
01 Year 
8.50%
9.00%
9.00%
10.00%
02 Year
9.00%
9.50%
9.50%
10.50%
03 Year
9.00%
9.50%
10.00%
11.50%
04 Year
9.00%
9.50%
10.50%
11.50%
05 Year
9.00%
9.50%
10.50%
11.50%
06 Year
10.00%
10.50%
11.00%
12.00%
07 Year
10.50%
11.00%
11.50%
12.50%

 • கொடுப்பனவுகளும் கட்டணங்களும்

Processing fees details

Charges apply under Normal Process (Approval within 04 working days)

Charges apply under Fast track (Approval within 02 working days)

LKR 1,000,000/- & below

LKR 4,750/-

LKR 10,000/-

LKR 1,000,001/- to LKR 3,000,000/-

LKR 7,500/-

LKR 15,000/-

LKR 3,000,001/- to LKR 5,000,000/-

LKR 12,500/-

LKR 25,000/-

LKR 5,000,001/- to LKR 7,000,000/-

LKR 15,000/-

LKR 30,000/-

LKR 7,000,001/- to LKR 10,000,000/-

LKR 20,000/-

LKR 40,000/-


See all Service Charges>>>

பொதுவாக்க கேட்கப்படும் கேள்விகள்

எனது கடன் அட்டைக்கான கடன் அல்லது வேறு வங்கியிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு கடனைப் பெறலாமா?

ஆம், எந்தத் தேவைக்கும் கடனைப் பெறலாம்

உத்தரவாதிகளை ஆதாரமாக வழங்க வேண்டுமா?

தேவையில்லை

எனது தற்போதைய கடன் பொறுப்பு மாதாந்த சம்பளத்தில் 40% இற்கு மேலானது. எனினும் நான் மிகை நேர ஊதியம் பெறுவதால் வேறொரு கடனை மீளச் செலுத்தும் நிலையில் உள்ளேன். நான் தனிநபருக்கான கடனைப் பெறலாமா?

இல்லை. இந்தத் திட்டத்தின் மூலம் பெற முடியாது. நிலையான வருமானம் மட்டுமே கருத்தில் கொள்ளப் படுகின்றது

எனது தொழிலானது வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பட்டியலில் இல்லை. எனக்கு கடன் வழங்கப் படுமா?

விண்ணப்பிப்பதற்கு முன் 011-2456966 / 011-2456962 என்ற எமது தனிநபர் வங்கிச் சேவைப் பிரிவின் இலக்கத்தை அழைத்து தேவையான விபரங்களைப் பெறவும்.

வட்டி வீதங்களில் மாற்றம் நிகழும் போது மாதாந்தக் கொடுப்பனவுகளிலும் மாற்றம் ஏற்படுமா?

இல்லை. இணங்கப்பட்ட வட்டி வீதத்திற்கமைய கடன்களுக்கான சகல கொடுப்பனவுகளும் நிலையான தொகையாக அறவிடப்படும்

வட்டி வீதம் எவ்வாறு கணக்கிடப் படுகிறது?

மாதக் கொடுப்பனவுகள் சமமானவை. எனினும், வட்டி வீதமானது எஞ்சியுள்ள கடன் தொகையின் பிரகாரம் கணிக்கப் படும் (குறைவுறும் கடன் மீதி – reducing balance)

பிந்திய கொடுப்பனவுகளுக்கான குற்றக் கட்டணம் எவ்வளவு?

பிந்திய கொடுப்பனவுத் தொகையில் 4%

எனது தொழில் நிலையில் மாற்றம் ஏற்படின்?

தயவு செய்து உடனடியாக வங்கிக்கு அறிவிக்கவும்

எனது கடன் விண்ணப்பம் உறுதி செய்யப் படுவதற்கு எத்தனை நாள் தேவை?

2 வேலை நாட்கள் - வேகமாக சேவை 
4 வேலை நாட்கள் - சாதாரண சேவை

எனது கடனை கொடுக்க வேண்டிய காலத்திற்கு முன்னர் செலுத்தலாமா ?

முடியும். எனினும், முன்கூட்டிய செலுத்தல் கட்டணமாக குறைந்தது டுமுசு 5,000/- அல்லது எஞ்சிய மொத்தக் கடன் தொகையில் 4% அறவிடப்படும்

இணைய வங்கிச் சேவை மூலம் எனது எஞ்சிய கடன் தொகையைப் பார்வையிடலாமா?

ஆம். நீங்கள் இணைய வங்கி வாடிக்கையாளராயின் உங்களது இணைய வங்கிச் சேவையில் கடன் பற்றிய விவரங்களையும் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டும்

செலான் வங்கியில் கணக்கொன்றைத் திறக்க வேண்டுமா?

ஆம். நிச்சயமாக.