Internet Banking Login

நிறுவன வாடிக்கையாளர்களுக்கான சம்பளப் பட்டியல் திட்டம்

l
சிறப்பம்சங்கள்

செலான் சம்பளப் பட்டியல் சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் ஊழியர்களுக்கும் விசேட நன்மைகளை வழங்கும் ‘SEYLAN PAYROLL PROPOSITION’ என்ற புதியதோர் திட்டத்தைச் செலான் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

Benefits for Employers
  • தொழில் வழங்குநர்களுக்கு ‘SEYLAN PAYROLL PROPOSITION’ மூலமான நன்மைகள்:
  1. வங்கி விபரக்கூற்றுகளின் விநியோகம்/சம்பளப் பட்டியல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சேவைக் கட்டணங்களில் 50% தள்ளுபடி செய்யப்படும். (12 மாதங்களுக்கு ஒரு தடவை மட்டும்)
  2. சேமிப்பு வைப்புப் பெட்டகத்திற்கான (Safety Locker) முதல் வருட வருடாந்தக் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படும். (கிளையில் இந்த வசதி கிடைப்பதைப் பொறுத்து)
  3. முதலாவது ஆண்டில் ஒன்லைன் வங்கிச் சேவையும் கொடுக்கல் வாங்கல் விழிப்பூட்டல் (Alert) சேவையும் இலவசம்.
  4. கணக்குக் கொடுக்கல் வாங்கல்கள் MT940 கோப்பின் மூலம் வாடிக்கையாளர்களின்  ERP /கணக்கியல் அமைப்புடன் ஒன்றிணைக்கப்படும்.
  5. வியாபாரத் தொகைகளுக்கேற்ப கடன் திட்டங்களுக்கு விசேட வட்டி வீதங்கள்.
  6. கடன் தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் நிறுவனக் கடன் அட்டை வழங்குவது பற்றிப் பரிசீலிக்கப்படும்.
  • பொது நிபந்தனைகள்:
  1. முன்னறிவித்தலின்றி அனுகூலத் திட்டத்தை/பிரிவை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.
  2. Seylan Payroll திட்டத்திற்கெனப் பதிவுசெய்துகொண்டால் மட்டுமே அனுகூலங்களைப் பெற முடியும்.
ஊழியர் அனுகூலத் திட்டத்திற்கான நிபந்தனைகள்:

“செலான் சம்பளப் பட்டியல்” (Seylan Income Saver) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஊழியர் அனுகூலத் திட்டம் பொருந்தும்.

  • Terms and Conditions
  • கடன் தொகையானது (தனிப்பட்ட கடன், வீடமைப்புக் கடன் கடன் அட்டை) வங்கியின் கடன் மதிப்பீடு மற்றும் கடன் கொள்கைக்கு அமைவாக நிர்ணயிக்கப்படும். தெளிவான CRIB அறிக்கை, கடன் தகுதி மதிப்பீடு, 3 மாதங்களுக்கு மேல் வங்கியின் ஊடாகச் செலுத்தப்பட்ட வருமானம் என்பன இதில் உள்ளடங்கும்.
  • ஏதேனும் தகுதி நிபந்தனைகளைக் கொண்டிராத கடன் விண்ணப்பத்தைச் செயற்படுத்துவதற்கு மேலதிக காலம் எடுக்கும்.
  • வெளிநாட்டுக்குப் புறப்படும் வேளையில் குறைந்தபட்ச கணக்கு மீதியாக 300 அமெரிக்க டொலரை அதற்குச் சமனான தொகையைக் கொண்டிருக்கும் வீசா பல்தொகுதி நாணய பயண அட்டைகளுக்கு (Multi Currency Travel Card) இலவச பயணக் காப்புறுதி வழங்கப்படும். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக, அட்டை வைத்திருப்பவர்கள் இது பற்றி அட்டை நிலையத்திற்கு (Card Center) அல்லது அட்டை வழங்கிய கிளைக்கு அறிவிக்க வேண்டும்.
  • பாதுகாப்பு வைப்புப் பெட்டகங்கள் (Safety Lockers), கிளைகளில் கிடைப்தைப் பொறுத்து, வழங்கப்படும். இதற்கான பிணையாக ஒரு பணத்தொகை வைப்புச் செய்யப்பட வேண்டும்.
  • செலான் ஷுவர் அனுகூலங்களுக்கான குறைந்தபட்ச தகுதி நிபந்தனை:இன்கம் சேவர் கணக்கில் தொடாச்சியாக 12 கலன்டர் மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- ஐ வரவு மீதியாகப் பேண வேண்டும்.
  • கடன் தகுதி மதிப்பீடு, வருமானம் 3 மாதங்களுக்குக் கணக்கின் ஊடாக அனுப்பப்படுதல் என்பவற்றிற்கு அமையவே சகல கடன்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும்.
  • ஒப்புக்கொள்ளப்பட்ட வருமானம் கணக்கின் ஊடாக அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை அனுசரிக்காத கணக்குளை இனங்காண்பதற்குக் காலாண்டுதோறும் மத்தியில் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கேற்ப கணக்கு மீள்வகைப்படுத்தப்படும்.
  • முன்னறிவித்தலின்றி அனுகூலத் திட்டத்தை/பிரிவை மாற்ற அல்லது இரத்துச்செய்ய வங்கி உரிமை கொண்டுள்ளது.