Internet Banking Login

மேலதிகப் பற்று வசதி

l
அம்சங்கள்
  • விளக்கம்
  • மிகைப்பற்று என்பது பொதுவாக உள்நாட்டு நாணயங்களுக்காக வழங்கப்பட்ட ஓர் கடன் வசதியாகும். குறிப்பிட்ட கால எல்லை வரை நடப்பிலிருக்கும் மிகைப்பற்று வசதியை வாடிக்கையாளர் பயன்படுத்த அனுமதி உண்டு. அத்துடன் மிகைப் பற்றுக்கு (சந்தை மாற்றங்களுக்கு அமைய) வட்டி அறவிடப்படும்.

    • நிதியியல் மற்றும் ஏனைய வசதிகள்

      மிகைப்பற்று வசதியானது பொதுவாக வியாபாரத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கான மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும், ஏனைய தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தங்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் பொருட்டும் வழங்கப்படுகிறது.

    • செலவுகள் (வட்டி, கட்டணம், அறிவிடல், தரகுக் கூலி)

      வட்டி நிலுவையானது தினசரி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதமும் கணக்கில் வரவிடப்படும். பொருத்தமான வட்டியானது வழங்கப்படும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆவணங்களுக்கான கட்டணம் / செயலாக்கக் கட்டணம் / சட்டக் கட்டணம் / மதிப்பீட்டுக் கட்டணம் போன்றவை வழங்கப்படும் வசதி மற்றும் பாதுகாப்பை பொருத்து அறவிடப்படும்.

    • தயாரிப்புகள் மற்றும் சேவைகளை தொடர்ந்து பெறுவதற்கான வழிமுறைகள்.

      தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்ட, மேலதிகப் பற்று பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை கணக்கு வைத்திருக்கும் கிளையின் முகாமையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

      • செலான் வங்கி அல்லது வேறெந்த நிதி நிறுவனத்திடமும் கடன் தொடர்பிலான எந்தவித பாதகமான கடன் வரலாறு இல்லாமலும், நடப்புக் கணக்கை சிறந்த முறையில் பேணிவரும் எந்தவொரு வாடிக்கையாளரும் மிகைப்பற்று வசதியை விண்ணப்பிக்க முடியும்.
      • இந்த மிகைப்பற்று வசதியானது வியாபாரத்திற்கு மூலதனம் செய்யும் நோக்கில் (தனிப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் வாடிக்கையாளர்களுக்கு) மற்றும் கோரிக்கைக்கமைய திருப்பி செலுத்தும் வாடிக்கையாளருக்கு முதன்மையாக வழங்கப்படும்.
      • வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (பிணையம் / பாதுகாப்பு) மாற்றுவழியினை வழங்க வேண்டும்.
      • எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உரிமை வங்கிக்கு உண்டு. எனினும் வங்கி வசதிகள் நிராகரிக்கப்படுமாயின் அதற்கான காரணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தப்படும்