Internet Banking Login

இணைய வங்கி சேவை

l
இணையத்தள வங்கிச் சேவை

உலகில் எங்கிருந்தாலும் எந்த நேரத்திலும் உங்கள் செலான் வங்கிக் கணக்குடன் தொடர்பினை ஏற்படுத்தி கணக்கு மீதி விசாரணை, பணப் பரிமாற்றம், பொது வசதிக் கட்டணக் கொடுப்பனவு போன்ற பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள www.seylanbank.lk என்ற இணையத்தளத்தில் பிரவேசியுங்கள்.


மொபைல் வங்கிச் சேவை

ஏதேனுமொரு தொலைபேசி ஊடாக உங்கள் கணக்குடன் தொடர்பு கொண்டு SMS வங்கிச் சேவை மூலம் உங்கள் வங்கி அலுவல்களைச் செய்துக்கொள்ளுங்கள்.


இணையத்தளக் கொடுப்பனவு நுழைவாயில்

வணிகர்களுக்கான கொடுப்பனவு முறையை மேம்படுத்துவதன் மூலம் MasterCardTM பாதுகாப்பாக கடன் அட்டைக் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்வதற்கு வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் VISATM மற்றும் MasterCardTM கடன் அட்டைக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள இது இடமளிக்கின்றது. எனவே வங்கியின் இந்தக் கொடுப்பனவு நுழைவாயிலைப் பயன்படுத்தி அதிகமான வாடிக்கையாளர்கள் பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.


சம்பளப் பட்டியல்கள்

நாட்டிலுள்ள மிகவும் வசதியான, பிரச்சினைகளற்ற சம்பளக் கொடுப்பனவு முறை இதுவாகும். தொழில் வழங்குநர்கள் தமது ஊழியர்களுக்கான சம்பளங்கள், தரகுப்பணம், போனஸ், ஊக்கக் கொடுப்பனவு முதலியவற்றை இதன் மூலம் இலகுவாக வழங்கலாம். நேரடியாகப் பணத்தை அல்லது காசோலைகளை வழங்கும் பிரச்சினை இதனால் தவிர்க்கப்படுகின்றது. செலான் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கான கொடுப்பனவு உடனடியாக வரவு வைக்கப்படும். ஏனைய கணக்கு வைத்திருப்பவர்களுக்கான கொடுப்பனவு SLIPS ஊடாக அடுத்த வேலை நாளில் வரவு வைக்கப்படும்.


வசதியான வங்கிச் சேவைகள்

பிரதான சேவை வழங்கும் பிரிவான கிளை வலையமைப்பின் மூலம் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நாடளாவிய ரீதியில் நேருக்கு நேர் தொடர்பு மேற்கொள்ளப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கு வசதியான முறையில் நாடெங்குமுள்ள பிரதான நகரங்களில் பொருத்தமான இடங்களில் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் தொடர்பு வசதியை மேம்படுத்தும் பொருட்டு 24 மணிநேர அழைப்பு நிலையம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கிச் சேவை வசதியை அதி௬டிய முறையில் அதிகரிப்பதற்காக, இலங்கையின் வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு அமைப்பில் (SLIPS) செலான் வங்கி பதிவு செய்துக் கொண்டுள்ளது.

ATM சேவைகள்

நாட்டின் பல பகுதிகளிலும் வசதியான இடங்களில் 177 ATM இயந்திரங்களையும் இடம் பெயர் ATM (Mobile ATM) சேவைக்கான வாகனம் ஒன்றையும் செலான் வங்கி கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவையை வழங்கும் நோக்கத்துடன், ATM பண வைப்பு வசதியைச் செயற்படுத்தியதன் மூலம் ATM கொடுக்கல் வாங்கல் சேவை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் செலான் வங்கி “Lanka Pay” வலையமைப்பில் இணைந்தது. இதன் பயனாக, இலங்கையிலுள்ள வேறு 08 வங்கிகளின் ATM களையும் நாடு முழுவதிலும் பயன்படுத்தும் வாய்ப்பை செலான் வங்கி வாடிக்கையாளர்கள் பெற்றனர்.


சர்வதேசம்


ஏற்றுமதிகள்

செலான் வங்கியிலுள்ள நாம், வர்த்தகம் தொடர்பான விடயங்களில் ஆலோசனைச் சேவை வழங்கும் அதே சமயத்தில், ஒரு வங்கியாக மாத்திரம் அல்லாது உங்கள் நிதிப் பங்காளியாகவும் விளங்க வேண்டும் என்பதைப் புரிந்துக் கொண்டு, அதற்கான முயற்சியை மேற்கொள்கிறோம்.


இறக்குமதிகள்

வியாபாரத் துறையின் போட்டி நிலையைக் கருத்திற்கொண்டு, செலான் வங்கி பல்வேறு தொழிற்துறைகள், பிரிவுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது.


வெளிநாட்டு நாணய வங்கியியல் பிரிவு

இரண்டு வகையான கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. On Shore கணக்குகள் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட BOI மற்றும் SAP வேலைத் திட்டங்களுக்கானவை. Off Shore கணக்குகள் இலங்கைப் பிரஜை அல்லாதவர்களுக்கானவை. எமது FCBU பிரிவின் கீழ், இணையற்ற தனிப்பட்ட சேவைகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் உங்களது நிறுவனத்தை நீங்கள் விரும்பியவாறு முன்னேற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள்.