Internet Banking Login

MPOS இயந்திரம்

அம்சங்கள்

செலான் கார்ட் சென்டர் தனது வணிகர்களை பெறும் (Merchant Acquiring) சேவையை இலங்கையிலுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு தற்போது வழங்குகிறது. உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் கொடுப்பனவுகளுக்கு பணத்தினால் மட்டுமன்றி கடன் அட்டை மூலமும் செலுத்துவதற்கான வாய்ப்பினை அளியுங்கள். மக்களால் விரும்பப்படும் இந்த முறைமை தற்போது நிலைபெற்ற நிறுவனங்களான பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், புடவைக் கடைகள், இரத்தினக் கல் மற்றும் நகைக் கடைகள், பயன முகவர்கள், வீட்டு துணைக் கருவி விற்பனையாளர்கள், புத்தகக் கடைகள் ஆகியவற்றினால் பரவலாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.

இணையத் தொடர்புடைய எமது கருவிகள் செலானின் வலையமைப்பினூடாக வீசா, மாஸ்டர் ஆகியவற்றுடன் இணைந்துள்ளதால் உலகிலுள்ள எந்தவொரு வீசா அல்லது மாஸ்டர்கார்ட் அட்டை மூலம் கொடுப்பனவுகளை ஏற்றுக் கொள்ளலாம். EMV சிப் உட்கொண்டுள்ள இந்த முனைக் கருவிகள் இந்தத் தொழில் துறையில் மிகவும் நவீனமானவையாகும்.

 • கடன் அட்டைகளை ஓர் இலகுக் கொடுப்பனவு முறைமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

  செலான் வங்கியின் விற்பனை முனை (POS) அமைப்பானது, உங்கள் வியாபாரம் நவீன தொழில் நுட்பத்துடன் வளர்ச்சியடைவதற்கு உதவுகின்றது. எமது விற்பனை முனைக் கருவிகளைப் பாவிப்பதன் மூலம் பணத்தைக் கையாள்வதனால் ஏற்படும் இடர்களைக் குறைக்க முடியும்.

  • உங்கள் வியாபாரத்தின் விற்பனை நடைமுறைகளை முன்னேற்றுகிறது.
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவு தெரிவுகளை வழங்குகிறது.
  • வருவாயை அதிகமாக்குவதுடன் நிறுவனத்தின் பண பரிமாற்றலையும் வலுப்படுத்துகிறது.
  • பௌதீக ரீதியாகப் பணத்தைக் கையாள்வதைக் குறைத்துக் கொள்ள முடியும்.

உங்களது வர்த்தகர் விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்யப்பட்டு செலான் வங்கி கார்ட் சென்டரில் கிடைத்தவுன் EDC கருவிகளை பாவனையில் ஈடுபடுத்த முடியும்.

 • கருவியின் அம்சங்களும் உரித்தான சேவைகளும்
  • கடன் அட்டைகளான வீசா, மாஸ்டர்கார்ட் ஆகியவற்றையும், பற்று அட்டைகளான வீசா, மாஸ்டர் இலத்திரனியல் அட்டை ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளல்
  • வீசா கடன் அட்டைகளைப் பாவிப்பதன் மூலம் பிறப்பிக்கப்படும் நிதி உங்களது செலான் கணக்கிலோ நியமிக்கப்பட்ட வேறு எந்தவெரு வங்கியிலுள்ள கணக்கிலொ மறு நாளிலேயே வரவு வைக்கப்படும்
  • மிகவும் விரைவான கொடுக்கல் வாங்கல் முறைமை
  • கருவியை உபயோகிப்பதற்கும் மோசடிகளைத் தடுப்பதற்குமான வர்த்தகர்களுக்கான பயிற்சி
  • கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கான 24 மணி நேர வாடிக்கையாளர் உதவிச்சேவை (செலான் அழைப்பு நிலைய துரித தொலைபேசி இலக்கம் 0112 00 88 88)
  • உங்கள் விற்பனை முனைக் கருவியிலிருந்து செலான் வங்கியின் தரவு மத்தியத்திற்கு தொலைபேசி முறைமையினூடாக அனுப்பப்படும் தகவல்கள் யாவும் அட்டையின் உரிமையாளரின் தகவல்களைப் பாதுகாப்பதற்காக மறைக்குறியாக்கம் செய்யப்படும்
  • வங்கியின் சார்பாக அலுவலகர் ஒருவரை நியமிப்போம். இவருடன் நீங்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
  • மாற்று விற்பனை முனைக் கருவியொன்று தேவைப்படும் போது, எமக்கு அறிவித்து 24 மணி நேரத்திற்குள் கொழும்பிலுள்ள சகல இட அமைவுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்
  • விற்பனை முனைக் கருவிகளிலிருந்து ளுடுவு தொலைபேசியினூடாக செலான் வங்கி அமைப்பு முறைக்கு உள்வரும் சகல தொலைபேசி பாவனைகளும் இலவசமானவையாகும்
 • 0% இலகுக் கட்டண திட்டமும் நீடிக்கப்பட்ட திட்டமும்
  • உங்களது சொந்த வியாபார நிறுவனத்தை நடத்துவது சவால்கள் மிக்கதால் எமது ஆக்கப் பொருள்கள் யாவையும் மிகவும் வாடிக்கையாளர் நேசமானவை. இதனை மனதில் கொண்டே கடன் மற்றும் பற்று அட்டைகளை ஏற்கின்ற விற்பனை முனைக் கருவிகளை உங்களுக்கு விழங்குகிறோம். மேலும், எமது 0மூ இலகுக் கட்டண திட்டம் நீடிக்கப்பட்ட கொடுப்பனவுத் திட்டம் அகியவை உங்கள் வியாபாரம் வளர்ச்சியடையும் போது மிகவும் அனுகூலமாக இருக்கும். ஏனெனில் அத்தகைய நேரத்தில் செலான் வங்கியானது உங்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் வழங்கி நிதிப் பிரச்சனைகள் ஏற்படாது வர்த்தகம் வளர்ச்சியடைய உதவுகிறது.
  • செலான் வங்கி கடன் அட்டை வாடிக்கையாளர்கள் பொருட்கள் அல்லது சேவைகளை இலகுக் கடன் முறை மூலம் பெறும் போது தமது கட்டணங்களை செலுத்துவதற்கு மிகவும் இலகுவான விதிகளை வழங்குகிறோம். தமது கட்டணங்களை 3, 6, 12, 24, 36, 48 அல்லது 60 மாதத் தவணைகளில் செலுத்த இடமளிக்கின்றோம். அவர்களது கொடுக்கல் வாங்கல்களை தவணைகளாப் பிரிப்பதன் மூலம் தமது கட்டணங்களை தவணை முறையில் செலுத்தும் தெரிவினை வழங்குகிறோம்
 • அட்டைகளை ஏற்கும் கருவியொன்றைப் பெறுவதற்கான தகைமைகள்
  • சட்ட அந்தஸ்தின் அடிப்படையில் 3 விதமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. எமக்குத் தேவையான ஆவணங்களும் இந்த அடிப்படையிலேயெ வேறுபடுகின்றன.
  • தனி நபர் தொழில் முயற்சி
  • பங்குடைமைதொழில் முயற்சி
  • கூட்டுத்தாபனங்களும் வரையறுக்கப்பட்ட கம்பனிகளும்
How to get started
 • EDC POS கருவி (அட்டைகளை ஏற்கும் கருவி) பெறுவதற்கு
  • உங்களது வியாபாரம் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்
  • EDC கருவியைப் பெறுவதற்து வங்கியினால் குறிப்பிடப்படுகின்ற குறைந்த அளவிலான வருவாயையாவது நீங்கள் பிறப்பிக்க வேண்டும்
  உங்களது வர்த்தகர் விண்ணப்பப் பத்திரத்தை செலான் வங்கி கார்ட் சென்டரிடத்தில் ஒப்படைக்கவும். அத்துடன் நிறுவன உரிமையாளர்களின் கைச்சாத்திடப்பட்ட 2 ஜோடி வர்த்தகர்களின் ஒப்பந்தங்கள் (உள்ளடக்கமாக), மற்றும் ஆதரவான ஆவணங்கள் பின்வருவனவற்றையும் சேர்த்து சமர்ப்பிக்கவும்.
 • தனி நபர் தொழில் முயற்சி
  • கையொப்பத்துடன் முழுமையான வர்த்தகர் விண்ணப்ப இறப்பர் முத்திரை பதிக்கப் பட்டிருத்தல் வேண்டும்
  • வர்த்தகர்களின் ஒப்பந்தங்கள் இரண்டு ஜோடி, மேலும் கையொப்பத்துடன் இறப்பர் முத்திரை இடப்பட்டிருத்தல் வேண்டும்
  • உரிமையாளரின்தேசிய அடையாள அட்டை,கடவுச் சீட்டு அல்லது ஓட்டுநர் சீட்டு (இரு பக்கமும்) ஆகியவற்றின் போட்டோ நகல் பிரதி
  • தனி நபரின் வர்த்தக பதிவு சான்றிதலின் பிரதி
  • குறித்த நபரின் பெயரில் செலான் வங்கியிடம் கணக்கு இருத்தல் வேண்டும்.
 • பங்குடைமை தொழில் முயற்சி
  • முழுமையான வர்த்தகர் விண்ணப்ப பங்குடைமை முத்திரை பதிக்கப்பட்டு பங்காளிகள் யாவரினதும் கையொப்பமிடப் பட்டிருத்தல் வேண்டும்
  • வர்த்தகர்களின் ஒப்பந்தங்கள் இரண்டு ஜோடி, மற்றும் பங்குடைமை இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு பங்காளிகள் யாவரினதும் கையொப்பம்
  • பங்காளிகள் யாவரினதும் தேசிய அடையாள அட்டை,கடவுச் சீட்டு அல்லது ஓட்டுநர் சீட்டு (இரு பக்கமும்) ஆகியவற்றின் போட்டோ நகல் பிரதி
  • பங்குடைமையின் வர்த்தக பதிவு சான்றிதலின் பிரதி
  • பங்காளிகள் யாவரினதும் பெயரில் அல்லது பங்குடைமையின் பெயரில் செலான் வங்கியிடம் கணக்கு இருத்தல் வேண்டும்.
 • வரையறுக்கப்பட்ட கம்பனிகள்
  • முழுமையான வர்த்தகர் விண்ணப்ப இறப்பர் முத்திரை பதிக்கப்பட்டு இயக்குநர் குழுமத்தின் தீர்மானத்தின் படி இயக்குநர்கள் யாவரும் கையொப்பமிடப் பட்டிருத்தல் வேண்டும்
  • வர்த்தகர்களின் ஒப்பந்தங்கள் இரண்டு ஜோடி, மற்றும் புடைக்கப்பட்ட முத்திரையும் இறப்பர் முத்திரையும் பதிக்கப்பட்டு இயக்குநர் குழுமத்தின் தீர்மானத்தின் படி கையொப்பமிடப் பட்டிருத்தல் வேண்டும்
  • கூட்டிணைப்புச் சான்றிதல்
  • கூட்டமைப்பின் அமைப்பு விதிகளின் அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிரதி
  • இயக்குநர் குழுமத்தின் தீர்மானம் (செலான் வங்கியுடன் வர்த்தக கணக்கொன்றினை ஆரம்பிப்பது பற்றி)
  • கம்பனி பதிவாளரியினால் அத்தாட்சிப் படுத்தப்பட்ட மிக சமீபமான இயக்குநர் குழாமின் பட்டியல்
  • இயக்குநர்கள் யாவரினதும் தேசிய அடையாள அட்டை, கடவுச் சீட்டு அல்லது ஓட்டுநர் சீட்டு (இரு பக்கமும்) ஆகியவற்றின் போட்டோ நகல் பிரதி
  • கம்பனியின் பெயரில் செலான் வங்கியிலே கணக்கு திறக்கப் பட்டிருத்தல் வேண்டும்
பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

வர்த்தகர்களுக்கான கட்டணக் கழிவு வீதம் என்ன?

வர்த்தகர்களுக்கான கழிவு வீதமானது வியாபாரத்தின் வருவாயைப் பொறுத்து பேசித் தீர்மானிக்கப்படும்

வர்த்தக ஸ்தாபனமொன்றில் விற்பனை முனைக் கருவியொன்றை பொருத்துவதற்கு எவ்வளவு காலம் தேவப்படும்?

சீரான நிலைய ஆராய்வின் பின்னர் 5 வேலை நாட்களுக்குள் பொருத்த முடியும்

வர்த்தகர்கள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வது எப்படி?

செலான் வங்கியுடன் கணக்கைப் பேணும் வர்த்தகர்களுக்கு அடுத்து வரும் வேலைத் தினத்திலேயே பணம் கணக்கிலிடப்படும். வேறு வங்கிகளில்; கணக்கைப் பேணும் வர்த்தகர்களது பணம் சரியான நேரத்தில், சிறப்பான முறையில் கணக்கிலிடப்படுவதை நாம் உறுதி செய்கிறோம்.

விற்பனை முனைக் கருவியொன்றை பொருத்துவதற்கு எவ்வளவு முற்பணம் செலுத்த வேண்டும்?

முற்பணம் செலுத்தத் தேவையில்லை. ஆகினும், கருவியைப் பொருத்தி 3 மாதங்களுக்குள் வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தளவு வருவாயை அடைய வேண்டும்

விற்பனை முனைக் கருவியைப் பெறுவதில் ஏற்படும் செலவுகள் எவற்றையாகிலும் வர்த்தகர்கள் ஏற்க வேண்டுமா?

இல்லை. இந்தக் கருவி வர்த்தகர்களிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கப்படும்
Average Turnover (LKR per Month) Monthly Rent (LKR per Month)
0<49,999 4500/=
50,000<99,999 3000/=
100,000<199,999 2000/=
200,000<299,999 1000/=

வர்த்தகர்களின் கேள்விகள், கருவி பழுதடைதல் போன்ற விடயங்களுக்கு யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் ?

செலான் அழைப்பு நிலையத்தில் தனிப்பயனுள்ள அலுவலகர் ஒருவரிடம் 200 88 88 என்ற இலக்கத்தினூடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.