Internet Banking Login

மைக்ரோ வியாபாரத்திற்கான தீர்வுகள்

l
பிபிதென உதுர

(Awakening North) விசேட கடன் திட்டமானது வடமாகாணத்தில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கடன் திட்டமாகும். (பிபிதென உதுர)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடன் திட்டமானது இலங்கையின் வடமாகாணத்தில் விவசாயம், கால்நடை, மீன்வளம், சிறியளவிலான தொழில் நடவடிக்கைகள் மற்றும் சிறிய நிறுவனங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கடன் வசதிகளை வழங்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • தகுதிபெறும் திட்டங்கள்

    • விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகள்
    • கால்நடை அபிவிருத்தி
    • கடல் சார்ந்த நடவடிக்கைகள்
    • மைக்ரோ மற்றும் சிறிய நிறுவனங்கள்
    • வியாபாரம் மற்றும் சுயதொழில் திட்டங்கள்
  • கடன்பெற தேவையான தகமைகள்

    • வடமாகாணத்தின் நிரந்தர வதிவாளராக இருத்தல் வேண்டும்.
    • மதிப்பிடப்பட்ட திட்ட செலவில் 10மூ ஐ விடக் குறையாத உரிமை பங்குதாரராக இருத்தல் வேண்டும்.
  • அதிகபட்ச கடன் தொகை

    உத்தேசிக்கப்பட்ட திட்ட செலவு தொகையில் 90% வரை வழங்கப்படும். அதாவது அதிகபட்ச கடன் தொகையாக LKR 200,000/- ரூபாய் வழங்கப்படும்.

  • வட்டி வீகிதம்

    9% வ.வ

  • மீள் செலுத்துகைக் காலம்

    5 ஆண்டு காலம் மற்றும் 6 மாத மேலதிக் காலம்.

  • பிணை பாதுகாப்பு

    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிணை பாதுகாப்பு வழிமுறை

சுயதொழில் ஊக்குவிப்புக் கடன் திட்டம். (SEPI)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடன் திட்டமானது தொழில் பயிற்சிப் பெற்ற இளைஞர்களுக்கு, சுயதொழில் திட்டத்தினை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • தகுதிபெறும் திட்டங்கள்.

    நிலை 1- 6 வரையிலான அனைத்து (NVQ) தேசிய தொழில் பயிற்சி தகைமைகளை உடையவர்கள்.

  • கடன்பெற தேவையான தகமைகள்

    • தேசிய தொழில் பயிற்சித் திட்டத்தில் அல்லது திறன் அபிவிருத்தித் திட்டத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்களில் தொழில் முனைவோருக்கான பயிற்சி நெறிகை பூர்த்தி செய்தவர்கள் இக்கடன் திட்டத்தில் பயன்பெறலாம்.
    • மதிப்பிடப்பட்ட திட்ட செலவில் 10மூ ஐ விடக் குறையாத உரிமை பங்குதாரராக இருத்தல் வேண்டும்.
  • அதிகபட்ச கடன் தொகை

    LKR 500,000/= ரூபாய்

  • மீள் செலுத்துகைக் காலம்

    4 ஆண்டு காலம் மற்றும் 8 மாத மேலதிகக் காலம்.

  • வட்டி வீகிதம்

    9% வ.வ

  • பிணை பாதுகாப்பு

    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிணை பாதுகாப்பு வழிமுறை