Internet Banking Login

செலான் இறக்குமதி சேவைகள்

l
அம்சங்கள்

வர்த்தகத் துறையில் போட்டி நிறைந்த இக்கால கட்டத்தில், செலான் வங்கியானது பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு தரப்பட்ட சேவைகளை வெவ்வேறு துறைகளுக்கும், பிரிவுகளுக்கும், பிரதேசங்களுக்கும் வழங்குகிறது. எமது நிபுணர் குழுவானது அதிவேகமாக ஆவணங்களைப் பரிசீலித்து முழுமையானதும், நேர்த்தியானதுமான சேவையை குறித்த நேரத்தில் வழங்குகிறார்கள்.

    • கடன் ஆவணக் கடிதம் வழங்குதல்

      உங்கள் கடன் கடிதம் சம்பந்தமாக, உங்கள் வழங்குநரின் அல்லது பெறுபவரின் வங்கியிடம் தேவையான அறிவுரை வழங்குதல்.

    • இறக்குமதிகளைப் பொறுப்பேற்றல்

      பொறுப்பேற்பிற்கான ஆவணங்கள் (Documents against Acceptance) பணம் பெறுதலுக்கான ஆவணங்கள் (Documents against Payment) போன்றவற்றை எமது கிளை வலையமைப்பின் மூலம் கையாளுதல்.

    • முன் கட்டணம் செலுத்துதல்

      இறக்குமதிகளுக்கு முன் கட்டண முறையில் பணம் செலுத்துதல்.

    • திறந்த கணக்கின் மூலமான கொடுக்கல் வாங்கல்கள்

      வெளிநாடுகளிலுள்ள உங்களது வழங்குநரின் ஆவணங்களை நேரடியாக கையாளுதல்.

    • இறக்குமதிக் கடன்கள்

      இறக்குமதிப் பொருட்கள் வந்திறங்கியவுடன் தேவையான நிதியுதவி வழங்குதல்.

    • கப்பல் சேவை சம்பந்தமான உத்தரவாதம்

      முதல் தர (original) கப்பல் ஏற்றுமதி சீட்டு இல்லாதவிடத்தில் உங்கள் பண்டங்களை இறங்குவதற்கு உதவி

    • மாற்று உண்டியல்களுக்கான (Bill of Exchange) உத்தரவாதம்

      உங்கள் D/A Bills முதிர்வடையும் போது பணம் வழங்கப்படும் என உத்தரவாதம் வழங்குதல்.

    • மீள் ஏற்றுமதி (entrecote) வியாபாரத்திற்கு உதவியளித்தல்

      மீள் ஏற்றுமதி கொடுக்கல் வாங்கல்களைப் பரிசீலித்தல்.

    • இறக்குமதிச் சீட்டுகளுக்கு விலைக் கழிவுகள் அளித்தல்

      தேவையேற்படின் உங்களது வங்கியுடன் இறக்குமதிச் சீட்டுகளுக்கு விலைக் கழிவுகள் வழங்குவது பற்றிப் பேசலாம்.

    • ஆலோசனை சேவைகள்

      வியாபார சேவைகள், வியாபார கருத்தரங்குகள் சம்பந்தமான நிபுணத்துவ ஆலோசனை

(கீழ் காண்பவற்றை சேவைக்கட்டணம், தரகு கட்டணத் தாளிலிருந்து பெறவும்)
    இறக்குமதி ஆரம்ப LC தரகுக்கட்டணம்
சிறு குறிப்புகளும் அறிவுறுத்தல்களும்
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்:
குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்: கணிப்பீட்டுச் சாதனம் விண்ணப்பப் படிவம்
உலகம் முழுவதுமான எமது வலையமைப்பில் 300ற்கும் மேற்பட்ட தொடர்புடைய வங்கிகள் உள்ளன பொருத்தமற்றவை சர்வதேச (SRS) முறைப்படியானது
பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

LC விண்ணப்பப் படிவமொன்றை எங்கே பெறலாம்?

எமது எந்தவொரு கிளையிலுமிருந்தும் பெறலாம்

இறக்குமதி சம்பந்தமான ஆவணங்களை எங்கே பெறலாம்?

எமது எந்தவொரு கிழையிலுமிருந்தும் பெறலாம்

LC விண்ணப்பம் திறக்கப்பட்டுள்ள நிலைமையை எப்படி அறியலாம்?

மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும்

இறக்குமதி ஆவணங்களின் நிலைமையை எப்படி அறியலாம்?

மின்னஞ்சல் அல்லது SMS மூலமாக அறிவிக்கப்படும்

முன் கொடுப்பனவுகளுக்காக (advance payment) கடன் ஒன்றைப் பெற்று கணக்கொன்றைத் திறக்கலாமா?

உங்கள் வங்கிக் கிளையுடன் இது பற்றி முற்கூட்டியே பேச வேண்டும்

ஆவணங்களை என்னிடம் அனுப்பி வைக்க முடியுமா?

உங்கள் வேண்டுகோளின் படி மட்டும் அனுப்பி வைக்க முடியும்