Internet Banking Login

FX முன்னோக்கு ஒப்பந்தங்கள்

l
அம்சங்கள்

முன்னோக்கு ஒப்பந்தம் என்பது ஓர் ஒப்புக்கொள்ளப்பட்ட எதிர்கால திகதியில், முன்னரே தீர்மானிக்கப்பட்ட பரிமாற்ற விகிதத்தில் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நாணயத்தை வாங்க அல்லது விற்க மேற்கொள்ளும் இணக்கப்பாட்டு உடன்பாடு ஆகும். முன்னோக்கு ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் எந்தவொரு நாணயத்திற்கும் எளிதில் ஏற்படும் நாணய மாற்று தன்மை மற்றும் ஏற்ற இறக்கங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றன.

முன்னோக்கு ஒப்பந்தங்கள் நிலவும் சந்தைப் பரிமாற்ற விகிதத்தின் படி வாடிக்கையாளருக்கு அனுகூலமான அல்லது பிரதிகூலமான பலன்களை அளிக்கும் என்று முன்னதாகவே ஒப்புக்கொள்ளப்பட்ட பரிமாற்ற விகிதத்தில் பரிவர்த்தனை செய்யப்படும்.

  • முன்னோக்கு ஒப்பந்தத்தில் கிடைக்கும் நன்மைகள்:
    • வெளிநாட்டு நாணய முன்னோக்கு ஒப்பந்தங்கள் சந்தை பரிமாற்ற இடர்களை சமாளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
    • எந்தவொரு முக்கிய வெளிநாட்டு நாணயங்களிலும் கிடைக்கும்.
    • மேலதிக கட்டணங்கள் இல்லை.
    • முன்னோக்கு ஒப்பந்த பயனாளி முன்னதாகவே செலவு மற்றும் வருமானத்தை தீர்மானிக்க முடியும்.
  • தேவையான தகமைகள்
  • அடிப்படை பரிமாற்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் எந்தவொரு வாடிக்கையாளரும் முன்னோக்கு ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆரம்பிப்பது எப்படி
  • முன்னோக்கு ஒப்பந்தத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
  • தேவையான தகைமைகள் இருப்பின் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள உங்களது கிளையை நாடுங்கள் அல்லது வர்த்தக சேவைகள் திணைக்களத்தை தொடர்புகொள்ளுங்கள்.

  • தேவையான ஆவணங்கள்
    • முன்னோக்கிய பரிமாற்ற முன்பதிவு தொடர்பான முன்காப்பீட்டுக் கடிதம்.
    • முன்னோக்கிய பரிவர்த்தனைகளை அணுக முன்னர் கடன் எல்லை ஒன்று நிறுவப்படல் வேண்டும்.
    • இரு தரப்பினரும் பரிவர்த்தனையை கையெழுத்திடல் வேண்டும். – வங்கி முன்னோக்கிய முன்பதிவை உறுதி செய்வதற்காக வாடிக்கையாளரின் கையெழுத்தை எதிர்பார்க்கும்.