Internet Banking Login

செலான் அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கு

l
அம்சங்கள்

அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கினை, ஏற்றுமதியாளர்கள், மறைமுக ஏற்றுமதியாளர்கள், உள்ளீடுகள் விநியோகஸ்தர்கள், தொழில்முறை சேவை வழங்குநர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், இரத்தினக்கல் மற்றும் ஆபரண விநியோகஸ்தர்கள் மற்றும் குடியுரிமை அல்லாதவர்களுக்கு சேவை வழங்குநர்கள் ஆகியோர் திறக்கலாம்.

    • திறக்கக்கூடிய நாணயங்கள

      USD, GBP, EUR, AUD, JPY, CHF, SGD, CAD, CHF, JPY, SEK, HKD, NZD, DKK, CNY

    • இக்கணக்கின் நன்மைகள்

      • உழைக்கும் வெளிநாட்டு நாணயங்களை சேமித்து நாணய மாற்று விகிதம் சாதகமாக இருக்கும்போது இலாபமடையலாம்.
      • கணக்கின் வகைகள் - அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கினை நியமிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களிலும் நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு அல்லது நிலையான கணக்குகளில் ஏதேனும் ஒருமுறையில் திறக்கலாம்.
கணக்கை ஆரம்பிப்பது எப்படி?
  • தகுதியான நபர்கள்
    • இலங்கையில் வசிக்கும் நபர்கள்
    • இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட தனியுரிமை மற்றும் கூட்டுரிமை வர்த்தகர்கள்
    • இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்கள்
    • 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் இல 07ன் கீழ் வெளிநாட்டு நிறுவனங்கள் என பதிவுசெய்யப்பட்ட இலங்கைக்கு வெளியிலுள்ள நிறுவனங்கள்.
  • கணக்கை திறப்பதற்கு தேவையான ஆவணங்கள்
    • பூரணமாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன்
    • வங்கியினால் உறுதிமொழி வழங்கப்பட்ட அல்லது,
    • அந்நிய செலாவணி ஈட்டும் வர்த்தகம் என உறுதியளிக்கும், முறையான நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழ்.
    • (உம்: ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இரத்தினக்கல் மற்றும் நகை அதிகாரம்)
கருவி மற்றும் கணிப்பான்கள்
அடிக்கடி கேடகப்படும் வினாக்கள்

அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கில் எவ்வாறான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்?

ஏற்றுமதி வருமானம், வெளிநாடுகளுக்கு வழங்கும் சேவைகளுக்காக கிடைக்கப்பெறும் கொடுப்பனவு.

இக்கணக்கை ஆரம்பிக்கும் ஒருவர் உள்ளுர் அல்லது மற்றுமொரு அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கிலிருந்து பொருட்கள் விநியோக கொடுப்பனவுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

ஆம், பணம் வழங்குநர் அந்நிய செலாவணி ஈட்டுபவராயின், பெறுநர் அவரது அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கிலிருந்து பணம் பெறமுடியும்.

அந்நிய செலாவணி ஈட்டுவோர் கணக்கு பிடித்துவைத்தல் வரிக்கு உட்படுமா?

இல்லை.