Internet Banking Login

சர்வதேச சேவை வழங்குனர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான வெளிநாட்டு நாணய கணக்கு - FCAISPE

l
அம்சங்கள்

சர்வதேச சேவை வழங்குனர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான வெளிநாட்டு நாணய கணக்கானது குறிப்பாக நிறுவனங்கள் / தனிநபர்கள் / இலங்கையில் பங்குடமை பதியப்பட்டு இலங்கைக்கு வெளியில் சேவையை வழங்கும் சேவை வழங்குனர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான விசேட வெளிநாட்டு நாணயக் கணக்காகும்.

    • நியமிக்கப்பட்ட நாணயங்கள்

      USD, GBP, CHF, JPY, AUD, SGD, CAD, DKK, SEK, HKD, EUR and NZD.

    • கணக்குகளின் வகைகள்

      சர்வதேச சேவை வழங்குனர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கான வெளிநாட்டு நாணய கணக்கை (FCAISPE) சேமிப்புக் கணக்காகவும், நடைமுறைக் கணக்காகவும், நிலையான வைப்புக் கணக்காகவும் ஆரம்பிக்க முடியும்.

கணக்கை ஆரம்பிப்பது எப்படி?
  • தேவையான தகைமைகள்
    • தொழில் வழங்குனர்
    • FAQ இல் பட்டியலிடப்பட்டுள்ளவாறு, இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரு தனிநபருக்கு சேவையை அல்லது தொழிலை முன்னெடுக்கும், இலங்கையிலுள்ள அல்லது இலங்கையில் பங்குடமையுள்ள உள்ள நிறுவனம் அல்லது இலங்கையில் வதிவுள்ள தனிநபர் தொழில் வழங்குனராகக் கருதப்படுவார்.
    • ஊழியர்கள்
    • FAQ இல் பட்டியலிடப்பட்டுள்ளவாறு, நிரந்தர அல்லது ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள சேவை வழங்குநர்கள் மூலம் வேலைக்கு உட்படுத்தப்பட்டு தொழில் வழங்குனருக்கு வழங்கும் சேவைக்காக தொழில் வழங்குனர்களினால் முழுமையாகவோ அல்லது பகுதியாக வெளிநாட்டு நாணய ஊதியத்தை பெறும் தொழிலை முன்னெடுப்போர் ஊழியர்களாவர்.
    • தேவையான ஆவணங்கள
      • தேசிய அடையாள அட்டை/ செல்லுபடியாகும் கடவுச்சீட்டு / வாகன அனுமதிப் பத்திரம்
      • தொழில் வழங்குனர்
      • 2006ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி திட்டத்தின் சட்ட 10 இல இன் கீழ் வருமான வரி விலக்கிற்கு தகுதியுடையவர் என்பதை உறுதிபடுத்தும் உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் கடிதம்.
      • ஊழியர்
      • 2006ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி திட்டத்தின் சட்ட இல 10 இன் கீழ் ஊழியர் வேலைத் திட்டத்தோடு தொடர்படையவர் என்பதையும், அவரின் சேவைக்காகவே வெளிநாட்டு நாணயம் வழங்கப்பட்டது என்பதையும் உறுதிபடுத்தும் தொழில் வழங்குனரின் கடிதம்.
    • அனுமதிபெற்ற பரிவர்த்தனைகள்
    • கடன்கள்
      • வெளிநாடுகளுக்கு வழங்கிய சேவைகளுக்கான பணத்தை மாற்றக்கூடிய நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை வங்கிகளின் ஊடாக பெற்றுக்கொள்ளல்.
      • விதிவிலக்களிக்கபட்ட திட்டங்களுக்காக தொழில் வழங்குனரினால் ஊதியமாக வழங்கப்படும் வெளிநாட்டு நாணயங்கள்.
      பணப் பற்றுகள்
      • விதிவிலக்களிக்கபட்ட திட்டங்களுக்காக தொழில் வழங்குனரினால் வங்கிப் பரிமாற்ற முறையில் வழங்கப்படும் வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவு.
      • இலங்கைக்கு வெளியில் குடியிருக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு, நடப்புக் கணக்கு பரிமாற்றத்தின் வாயிலான வெளிநாட்டு நாணய கொடுப்பனவு.
      • சட்ட ரீதியாக இலங்கை ரூபாய்க்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது,
அடிக்கடி கேடகப்படும் வினாக்கள்

தொழில் வழங்குனர் வகையின் கீழ் FCAISPE கணக்கை ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள்.

2006ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி திட்டத்தின் சட்ட இல 10 இன் கீழ் வருமான வரி விலக்கிற்கு தகுதியுடையவர் என்பதை உறுதிபடுத்தும் உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் கடிதம்.

ஊழியர் ஒருவர் FCAISPE கணக்கை ஆரம்பிக்கத் தேவையான ஆவணங்கள்.

2006ம் ஆண்டு திருத்தப்பட்ட உள்நாட்டு இறைவரி திட்டத்தின் சட்ட இல 10 இன் கீழ் ஊழியர் வேலைத் திட்டத்தோடு தொடர்படையவர் என்பதையும், அவரின் சேவைக்காகவே வெளிநாட்டு நாணயம் வழங்கப்பட்டது என்பதையும் உறுதிபடுத்தும் தொழில் வழங்குனரின் கடிதம்.

எனக்கு கிடைக்கும் வட்டி வீதம் என்ன ?

இதுவே செலான் வங்கியினால் எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திற்கும் வழங்கப்படும் வழமையான வட்டி வீதமாகும்.

FCAISPE இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சேவை வழங்குனர் பிரிவுகள் எவை?

  • ஒரு உறுப்பினரது திறனை அங்கீகரித்து இணைத்துக்கொள்வதுடன் அவரது பயிற்சியின்போது அவரது நடத்தை அங்கீகரிக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டு, தொழிற்துறையின் உறுப்பினர் என்ற வகையில் ஒரு தனிநபரினால் வழங்கப்படும் சேவைகள்.

  • கணக்காளர், வணிக கணக்கு பதிவியல் அல்லது வணிக கணக்காய்வு

  • வரி ஆலோசனை சேவைகள்

  • வரைவாளர் சேவைகள்

  • பொறியியல் சேவைகள்

  • மென்பொருள் மேம்படுத்தல், தரவு செயலாக்கம், அடிப்படைத் தரவு வளர்ச்சி, அல்லது கணனி வடிவமைப்பு.

  • இலங்கைக்கு வெளியேயான விளம்பரவியல் சேவைகள்

  • ஆராய்ச்சி வேலைகள் மற்றும் அறிக்கை எழுதுதல்

  • புகைப்படக் கலை

  • இலங்கைக்கு வெளியே பிரசுரித்தல் சேவை

  • இலங்கைக்கு வெளியே அழகு கலை, சிகையலங்காரம், அல்லது மொடலிங்

  • விளையாட்டுத் துறை சார்ந்த நபர் அல்லது கலைஞர்.

  • விலைமதிப்பீட்டாளராக அல்லது ஏல நிறுவன பணியாளராக சேவையாற்றுதல்.

  • நீர்க்குழாய் வினைஞர் அல்லது கொத்தனார் அல்லது காபென்ட்டர் சேவைகள்.

  • அளவியல் சேவை

  • சுகாதார சேவைகள்

  • இலங்கைக்கு வெளியிலுள்ள விவசாய சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல்.