Internet Banking Login

FAQ

l

எனது விவரங்களைப் புதுப்பிக்க முடியுமா?

புதிய விவரங்களை உங்கள் கணக்கு பேணப்படும் செலான் வங்கிக் கிளையில் ஒப்படைக்கவும்

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” மூலம் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியுமா?

எந்தவொரு செலான் வங்கிக் கிளையிலும் புதிய டிக்கிரி கணக்கொன்றை ஆரம்பிக்க அல்லது தற்போதுள்ள டிக்கிரி கணக்கில் பெறுமதியை வரவு வைக்க மாத்திரமே அன்பளிப்புச் சீட்டைப் பயன்படுத்த முடியும்.

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பிற்கு எதிராக கடன் பெற முடியுமா?

வைப்புத் தொகையின் 90% வரை கடன் பெறும் வாய்ப்பு உண்டு.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை விண்ணப்பிப்பது எப்படி?

  • இலங்கை மத்திய வங்கியின் பதிவு பெற்ற முதன்மை வணிகர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகள் மூலம் எந்த நேரத்திலும் திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும்.
  • பரிவர்த்தனையின் பின் உங்கள் முகவர் இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் மத்திய வைப்புத் திட்டமுறைமைகளில் அடங்கும் பிணையங்கள் கணக்கினை ஆரம்பிப்பார். இக்கணக்கு சந்தையில் உங்கள் வர்த்தகத்தின் அடிப்படையில் வரவு/பற்று ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

நான் எனது வதிவற்ற தேசிய இனத்தவரல்லாத வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் பெற முடியுமா?

ஆம், தனிப்பட்ட கொடுப்பனவுகளுக்கு சாத்தியமுள்ளது.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றினால் பயனடைபவரின் வயதெல்லை என்ன?

சீட்டு கொள்வனவு செய்யப்படும் திகதியில் பயனடைபவரின் வயது 15க்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு நாணய நிலையான வைப்பினை வெளிநாட்டு நாணயத்தில் மீளப் பெற முடியுமா?

பணத்தை வெளிநாட்டு வரைவு அல்லது தந்தி பரிமாற்ற முறையில் மாற்றி பெற்றுக்கொள்ளமுடியும். 

திறைசேரி உண்டியல்களின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • முதிர்வு வருமானத்தில் ஈட்டிய தொகை (முகமதிப்பு) முதிர்வின்போது வழங்கப்படும்.
  • இரண்டாம் நிலை சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடியது.
  • குறுகியகால கடன் பத்திரம். (3 முதல் 12 மாதங்கள் வரை).
  • வருவாய் விகிதங்கள் வணிகச் சந்தையினால் தீர்மானிக்கப்படும்.
  • ஆபத்தற்ற உயர் பாதுகாப்பான கடன் பத்திரம்.
  • பங்குகளற்ற வடிவில் வெளியிடப்படும்.
  • 2 ஆண்டு முதல் 20 ஆண்டு வரையான கால முதிர்வைக் கொண்டது.

இலங்கையில் இருக்கும்போது இக்கணக்கிற்கு பயன்படுத்தப்படாத வெளிநாட்டு நாணயங்களை வரவு வைப்பதற்கு அனுமதியுள்ளதா?

ஆம், வெளிநாட்டு நாணய தாள்கள், பயணிகள் காசோலைகள் ஆகியவற்றை வைப்பிலிடலாம்.

“டிக்கிரி அன்பளிப்புச் சீட்டு” ஒன்றின் செல்லுபடியாகும் காலம் என்ன?

வழங்கப்பட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு அன்பளிப்புச் சீட்டு செல்லுபடியாகும்.

பக்கங்கள்