Internet Banking Login

நீங்கள் அறிந்திருக்க வேண்டிய அத்தியாவசியமான எரிபொருள் சேமிப்பு வழிகள்

l


பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. எனவே, எரிபொருளைச் சேமிக்கத் தொடங்குவது இப்பொழுது மிகவும் முக்கியமாகியுள்ளது. எரிபொருளைச் சேமித்துப் பணத்தை மீதப்படுத்துவதற்கான சில அத்தியாவசிய வழிகள் இதோ

  1. வாகனத்தைத் திறமையாகச் செலுத்துங்கள்
  2. நீங்கள் வாகனம் செலுத்தும் முறையை மாற்றுவதன் மூலம் எரிபொருளுக்கான செலவைக் குறைக்கலாம். கடுமையாக பிரேக் செய்யும்போது அல்லது திடீரென வேகத்தை அதிகரிக்கும்போது, ஒடுக்கமான திருப்பங்ளை எடுக்கும்போது அல்லது அது போன்ற வேறு சந்தர்ப்பங்களில் வாகனத்திற்கு வழக்கத்தைவிட அதிகமான எரிபொருள் தேவைப்படும். வாகனத்தின் அக்ஸிலேட்டரை மெதுவாக அழுத்தினால் குறைவான எரிபொருளையே என்ஜின் நுகரும். உங்கள் வாகனம் பலவித ஓட்டும் முறைகளைக் கொண்டிருந்தால், சூழல்நல முறை அல்லது சௌகரிய முறை விருப்பத்தேர்வை தெரிவு செய்யுங்கள். அதனால், ஸ்போட்ஸ் முறைக்குத் தேவைப்படுவதைவிட குறைவான எரிபொருளே பயன்படுத்தப்படும். உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவது எரிபொருளை மீதப்படுத்துவதற்கு மற்றுமொரு வழியாகும். அடிக்கடி குறுகிய பயணங்களை மேறகொண்டால் ஒவ்வொரு தடவையும் என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு அதிக எரிபொருள் செலவாகும். எனவே, அத்தைகைய பயணங்களை இயன்றளவு குறையுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல நெரிசலற்ற இலகுவான வழியைப் பயன்படுத்துவதன் மூலமும் எரிபொருளுக்கான செலவைக் குறைக்கலாம்.

  3. வாகன நெரிசலுள்ள நேரங்களைத் தவிருங்கள்
  4. நாம் முன்னர் குறிப்பிட்டது போல, வாகன நெரிசலுள்ள வீதிகளில் அல்லது நெரிசல் நிலவும் நேரங்களில் பயணம் செய்வதை முடியுமானளவு தவிருங்கள். தொடர்ந்து பயணிக்கும் வாகனத்தைவிட நிற்பாட்டப்பட்ட நிலையில் இயங்கிக்கொண்டிருக்கும் என்ஜின் அதிகமான எரிபொருளை நுகரும். நீங்கள் வாகன நெரிசலுக்குள் அகப்பட்டிருக்கும்போது உங்கள் A/C மற்றும் வானொலி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தால், அவற்றிற்காகவும் மேலதிக எரிபொருள் செலவாகும்.

  5. செலான் கடன் அட்டையின் சிறப்புச் சலுகைகள்
  6. எரிபொருளில் பணத்தைச் சேமிக்கக்கூடிய ஒரு சிறப்புச் சலுகையை செலான் வங்கி உங்களுக்கு வழங்குகின்றது. இப்போதிருந்து 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரை, ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 3ஆம் வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் உங்களது கடன் அட்டையைப் பயன்படுத்தி வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பும்போது ஒவ்வொரு லீட்டருக்கும் 10 ருபாயை சேமிக்க முடியும். உங்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தில் பி.ப. 4.00 மணி முதல் பி.ப. 8.00 மணி வரையான நேரத்தில் மாத்திரமே இச் சலுகை செல்லுபடியாகும் என்பதை நினைவில் வையுங்கள்..

  7. பராமரிப்பு
  8. உங்கள் வாகனத்திற்கு எப்போதும் சிறந்த பராமரிப்பை வழங்குவது மிக முக்கியமாகும். அதன் மூலம் வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். அத்துடன், வாகனம் சுத்தமாக இருந்தால் அதன் ஓட்டமும் சுமுகமாக இருக்கும். சுமுகமாகவும் சிறப்பாகவும் ஓடும் வாகனங்களுக்கு குறைந்தளவு எரிபொருளே தேவை.,

  9. டயர்கள்
  10. உங்கள் வாகனத்தின் ஆயுட் காலம் அதன் டயர்களிலும் அவை எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் பெருமளவு தங்கியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? உங்கள் வாகன வகைக்கு மிகவும் பொருத்தமான டயர் அமுக்கத்தைப் பேணுவது போன்ற ஒரு சிறிய விடயத்தில் கவனம் செலுத்தினால் வாகனத்தை நல்ல நிலமையில் வைத்திருக்கவும் எரிபொருள் விரயத்தைத் தவிர்க்கவும் முடியும்.

இந்த 5 வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் தினந்தோறும் எரிபொருள் பாவனையைக் குறைத்துப் பணத்தை மீதப்படுத்தலாம். ஆகவே, தாமதிக்காதீர்கள். இன்றே செயலில் இறங்குங்கள்

புதிய கருத்தை சேர்

1 + 6 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.