Internet Banking Login

நடைமுறைக் கணக்கு

l
அம்சங்கள்

உங்கள் நிறுவனம் சிறிய அல்லது நடுத்தர அளவுடையதானாலும், உலகளாவிய கூட்டுத்தாபனமானாலும், நாம் எமது வாடிக்கையாளர்கள் யாவருடனும் தனித்தன்மையான ஓர் உறவுமுறையை ஏற்படுத்தி, உங்கள் தொழில் தழைத்தோங்க முயற்சிக்கிறோம். உங்களது தொழிலின் தனித்தன்மையான தேவைகளை புரிந்துகொள்வதனால், அதன் வளர்ச்சியில் ஆக்கபூர்வமான முறையில் பங்களிக்கிறோம். அதனால் எமது உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வழிகாட்டல்களையும் வழங்குகிறார்கள்.

  • கணக்கு வகைகள்:

    தனியாருடைமை, பங்குடைமை, வரையறுக்கப்பட்ட கம்பனி.

  • 24X7 ரீதியானஅணுகல்:

    "இணைய வங்கி" / "SMS வங்கி" / "தொலைபேசி வங்கி" போன்றவற்றின் மூலம் உங்கள் கணக்கினை எந்நேரமும், எவ்விடத்திலிருந்தும் அணுகமுடியும்.

  • சுலபமான வங்கிச் சேவை :

    நாடளாவிய கிளை வலையமைப்பு, SMS ஆவலையமைப்பு, 365 நாள் வங்கிச் சேவை என்பவற்றின் மூலமாக

  • உங்களது சொந்தப் பெயரிலேயே காசோலைப் புத்தகமொன்றைப் பெறும் வாய்ப்பு.

  • இலவச மாதாந்த வங்கிக் கூற்று.

  • Make business easy

    "Seylan Payroll" வசதியின் மூலம் உங்கள் ஊழியர்களுக்கு மாதக் கொடுப்பனவுகளைச் செய்யலாம்.

  • உங்கள் கணக்கின் நிலைமையைப் பொறுத்து கடன் வசதிகளைப் பெறும் வாய்ப்பு.

  • "Seylan IPG, "Seylan MPOS என்பவற்றின் மூலம் உங்கள் வியாபாரத்திற்கு கவர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம், பிறர் மத்தியில் உங்களது கொடுப்பனவுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதனை அதிகரியுங்கள்.

ஆரம்பிப்பது எப்படி
  • தகைமை
    • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
    • கண்ணியமானமுறையில் கணக்கைப் பேணக்கூடிய தகைமை குறித்து வங்கியினால் ஆராயப்படும்.
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, வாகன ஓட்டுநர் சான்றிதல்.

    கவனிக்கவும் : சிறப்பானதோர் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கில் வேறு ஆவணங்கள் உங்களிடம் கோரப் படலாம்.

  • குறைந்தளவு வைப்பீடு
    • குறித்த கிளையின் தரநிலையைப் பொறுத்தது
  • மேலதிகமாக வேண்டப்படுபவை :
  • தனியாருடைமை அல்லது பங்குடை மையாயின்:

    • ஸ்தாபனத்தின் வியாபாரப் பதிவுச் சான்றிதழ்.
    • உங்கள் முகவரியானது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலிருந்து வேறுபட்டதாயின், குறைந்தளவு 3 மாதத்திற்கான கட்டணக் கொடுப்பனவு (billing proof) ஆதாரம்.
    • ‘வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுதல்’(KYC) தேவைகளுக்கான தகவல்கள்.

    வரையறுக்கப்பட்ட கம்பனியாயின்

    • ‘வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுதல்’(KYC) தேவைகளுக்கமைய ஸ்தாபனத்தின் இயக்குநர்கள் யாவரும் தமது தனிப்பட்ட விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.
    • கூட்டிணைவாக்கலுக்கான சான்றிதழ்
    • பொதுக் கம்பனியாயின், வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான சான்றிதழ்.
    • வங்கிக் கணக்கை ஆரம்பிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்ட இயக்குநர்களின் கூட்டநிகழ்ச்சியின் சாராம்சம். சங்க அமைப்பு விதிகளில் இது உள்ளடக்கப்படாவிட்டால் மட்டுமே இது தேவைப்படும்.
    • சங்க அமைப்பு விதிகள்

    இலகுவான தகவல் தேடுதலுக்கு உதவும் முகமாக தேவையான ஆவணங்கள் யாவும் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.

கட்டணங்கள்

கட்டணவிபரங்கள்

கட்டணங்கள்

நடைமுறைக் கணக்கு  
மாதாந்த சேவைக் கட்டணம் (குறைந்தளவு நிலுவைக்குப் பதிலாக) தனிப்பட்ட நடைமுறைக் கணக்குகளுக்கு

LKR 275/-

மாதாந்த சேவைக்  கட்டணம் (குறைந்தளவு நிலுவைக்குப் பதிலாக) மற்றைய நடைமுறைக் கணக்குகளுக்கு

LKR 550/-

காசோலை ஒன்றிற்கான கட்டணம்

LKR 20/-

கணனி மூலமான வங்கிச் சேவைகள்  
இணையத்தள வங்கிச் சேவை முதல் 3 பாவனையாளர்களுக்கும் ;LKR 1,000/-, மேலதிக பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் LKR 250/-

கட்டணங்கள் யாவற்றையும் பார்வையிடவும்>>>

அனைத்து சேவை கட்டணங்கள் பார்க்கவும்>>>

குறிப்புகள், பரிந்துரைகள், வழிகாட்டல்கள்:
குறிப்புகள் விண்ணப்பப் படிவங்கள்
மாற்று வங்கியியல் முறைகள் தனியாருடைமை அல்லது பங்குடைமைக்கான விண்ணப்பப் படிவம்
கிளைகள் திறக்கப்படும் நேரங்கள் வரையறுக்கப்பட்ட கம்பனிக்கான விண்ணப்பப் படிவம்
Seylan Payroll வசதி விதிமுறைகளும் நிபந்தனைகளும்
நிலையான கட்டளைக்கான விண்ணப்பம்
Seylan Payroll வசதிக்கான விண்ணப்பம்