Internet Banking Login

கூட்டு நிறுவன சேவைகள்

l

செலான் வங்கியிலுள்ள நாம், நிறுவன ரீதியான எமது வாடிக்கையாளர்களுக்குப் பூரணமான வங்கிச் சேவைகளையும் அவர்களின் வியாபாரத்திற்கு உகந்த முறையில் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நிதித் தீர்வுகளையும் வழங்குகின்றோம்.

நிறுவன மற்றும் கடல் கடந்த வங்கிச் சேவை

உங்கள் வியாபார அலுவல்களை இலகுவாக்கும் விதத்திலும் உங்கள் வியாபார இலக்குகளை அடைவதில் நிதி வசதியின் முக்கிய பங்களிப்புப் பற்றிய புரிந்துணர்வுடனும் வகுக்கப்பட்டுள்ள எமது வங்கி வசதிகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உங்கள் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கு உதவும்.

நடைமுறைக் கணக்கு

உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு உங்கள் அன்றாட நிதித் தேவைகளை நேர்த்தியாக முகாமைத்துவம் செய்ய நீங்கள் விரும்பினால், அதிக வருமானம் தரும் வியாபாரத்திற்கு அல்லது சிக்கலான வங்கித் தேவைகளை நிறைவு செய்வதற்கு இக் கணக்கு மிகவும் உகந்ததாகும்.

ஏனைய வங்கிச் சேவைகள்

உங்கள் வியாபாரம் செழித்து வளர்வதைக் காண நாம் விரும்புகிறோம். உங்கள் தேவைகளைப் புரிந்துக்கொண்டு, உங்களுக்கு இலகுவான மற்றும் விரைவான வங்கிச் சேவையை வழங்கி, உங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவும் முகமாக இணையத்தளக் கொடுப்பனவு நுழைவாயில், சம்பளப் பட்டியல், இணையத்தள வங்கிச் சேவை போன்ற மாற்று வசதிகளை நாம் வைத்திருக்கின்றோம்.