Internet Banking Login

அழைப்பு நிலையம்

l

செலான் வங்கியின் அழைப்பு நிலையத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதன் மூலம் வங்கிச் சேவைகளை நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தவாறே அல்லது அலுவலகத்திலிருந்தவாறே பெற்றுக் கொள்ளக்கூடிய சௌகரியத்தை அனுபவியுங்கள். +94 11 200 88 88 எனும் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி எமது வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவருடன் உரையாடுங்கள். இச்சேவையை 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களிலும் எப்பகுதியிலிருந்தும் ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.

எமது அழைப்பு நிலையத்திலிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய சில முக்கியமான சேவைகளின் விபரங்கள் வருமாறு

  • வங்கிச் சேவைகள் தொடர்பிலான விபரங்களை பெற்றுக் கொள்வது
  • உங்கள் கடன் அட்டைகள், சேமிப்பு கணக்குகள், நடைமுறை கணக்குகள் மற்றும் கடன்கள் பற்றிய மீதிகளை அறிந்து கொள்வது
  • உங்கள் கடன் அட்டைகளை அல்லது டெபிட் அட்டைகளை செயற்படுத்திக் கொள்வது, செயலிழக்கச் செய்வது
  • பொது கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகளை மேற்கொள்வது
  • உங்கள் கடன் அட்டைகளில் உடனடி எல்லை நீடிப்புகளை மேற்கொள்வது
  • அட்டைகளுக்கான கொடுப்பனவு உறுதிப்படுத்தல்களை பெற்றுக் கொள்வது (நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும்)