Internet Banking Login

வணிக தீர்வுகள்

l
விவசாயக் கடன்கள்.

விவசாயக் கடன்கள்

வாடிக்கையாளரின் விவசாய நடவடிக்கைகளுக்கான மூலதன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு வங்கியானது குறுகியகால கடன் வசதிகளை வழங்குவதுடன், மூலதன செலவினங்;களுக்காக நடுத்தர கடன் வசதிகளை வழங்குகின்றது.

சருசர கடன் திட்டம் - புதிய ஒருங்கிணைந்த கிராம கடன் திட்டம்.

சருசர கடன் திட்டம் - புதிய ஒருங்கிணைந்த கிராம கடன் திட்டம்.

சருசர கடன் திட்டமானது இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்பின் மூலம் நுண்ணிய மற்றும் சிறிய அளவிலான பருவகால விளைச்சல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும் கடன் வசதியாகும்.

  • தேவையான தகைமைகள்

    • உரித்துரிமையுடைய மற்றும் குத்தகை நிலத்திற்கு உரிமை கொண்ட விவசாயியாக இருத்தல் வேண்டும்.
    • 18 முதல் 55 வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும். கடன் விண்ணப்பதாரி 55 வயதிற்கு மேற்பட்டவராயின் அவரின் மகள்ஃமகன் அல்லது குடும்ப அங்கத்தினரொருவர் கடனிற்கு பங்குதாரராக இருத்தல் வேண்டும்.
  • அதிகபட்ச கடன் தொகை

    உங்கள் திட்டத்திற்கு தேவையான தொகையின் 75% வரை வங்கி வழங்கும்.

  • மீள் செலுத்துகைக் காலம்.

    270 நாட்கள்

  • வட்டி விகிதம்

    இலங்கை மத்திய வங்கியே வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் (தற்போது 7%)

  • பாதுகாப்பு

    வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுந்த பாதுகாப்பு

கப்புறுக்கா ஆயோஜன கடன் திட்டம் - தென்னை பயிர்ச் செய்கை சபையின் கடன் திட்டம்.

கப்புறுக்கா கடன் திட்டமானது உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் பயிர்செய்கையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தென்னைப் பயிர்செய்கை சபையோடு இணைந்து வடிவமைக்கப்பட்ட கடன் வசதியை வழங்கும் திட்டமாகும்.

  • தகுதியான துறைகள் (பிரிவுகள்)

    • புதிய தென்னை ஊடுபயிர்செய்கை
    • தென்னை ஊடுபயிர்ச் செய்கையுடனான மீள்நடுகை
    • முதிர்வடைந்த தென்னைகளுக்கான ஊடுபயிர்ச் பயிர்ச்செய்கை
    • முதிர்வடைந்த தென்னைகளுக்காக புதிய பயிர்ச்செய்கை
    • ஒற்றை முறையிலான தென்னை மீள்பயிர்ச்செய்கை
    • தென்னை ஊடுபயிர்ச் செய்கைகான நீர்ப்பாசனம்
    • தென்னந் தோட்டங்களுக்கான உபகரணங்கள்.
    • அன்னாசி மற்றும் வாழை ஆகியவற்றிற்கான நாற்றங்கால்
    • தென்னந் தோப்புகளில் கால்நடை பராமரிப்பு
  • அதிகபட்ச கடன் தொகை

    தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சம் இரண்டு திட்டங்களுக்காக LKR 2,000,000/- ரூபாய் வரையில் வழங்கப்படும்.

  • மீள்செலுத்துகைக் காலம்

    5 ஆண்டுகள் மற்றும் ஒரு வருட மேலதிக காலம்.

  • வட்டி விகிதம்

    9% வ.வ.

  • பாதுகாப்பு

    வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வழிமுறை

வியாபார அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டு கடன் திட்டம் (CSDDLS)

வியாபார அளவிலான பாற்பண்ணை மேம்பாட்டு கடன் திட்டமானது பால் உற்பத்தியை மேம்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியோடு இணைந்து வடிவமைக்கப்பட்ட கடன் வசதியை வழங்கும் திட்டமாகும்.

  • தகுதியான துறைகள் (பிரிவுகள்)

    • பசுக்கள் கொள்வனவு
    • மாட்டுத்தொழுவங்கள், கட்டிடங்கள், நீர்பாசன அமைப்புகள் (தெளிப்பான்கள், குழாய்கள் போன்றவற்றை மேம்படுத்தல்) கிணறு அல்லது வேளாண்மைக் கிணறு.
    • பசுந்தீவன உற்பத்தி
    • புதிய பண்ணைகளை ஸ்தாபித்தல்.
    • பண்ணை மேம்படுத்தல்
    • உயிரியல் வாயு பிரிவுகள் அமைத்தல்
    • பண்ணையை விரிவுபடுத்தல்.
    • பால் பதப்படுத்தல் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தி.
    • டிரக்டர், தண்ணீர் குழாய், குளிர்சாதனப்பெட்டி, க்ரீம் பிரிப்பான், பால் கறவை இயந்திரம், மற்றும் புல் வெட்டும் இயந்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்தல்.
    • பால் சார்ந்த தயாரிப்புப் பொருட்களைப் பாதுகாக்க மற்றும் அதற்கான போக்குவரத்து வசதிகள்.
    • பால் அபிவிருத்தியுடன் நேரடியாக தொடர்புடைய அல்லது ஏனைய குடிக்கும் திரவ பால் முறையை முன்னேற்றுதல்.
    • கால்நடை மருத்துவர் / அல்லது கால்நடை அதிகாரியினால் பரிந்துரை செய்யப்பட்ட புதுமையான, தரம்மிக்க உற்பத்திகளை உருவாக்குதல்.
  • அதிகபட்ச கடன் தொகை

    LKR 25,000,000/- ரூபாய்

  • மீள்செலுத்துகைக் காலம்

    5 ஆண்டுகள் மற்றும் 6 மாத மேலதிகக் காலம்.

  • வட்டி விகிதம்

    6% வ.வ.

  • பாதுகாப்பு

    வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வழிமுறை