Internet Banking Login

செலான் ஹரசர

l
அம்சங்கள்

செலான் ஹரசர திட்டத்தின் மூலம் இலங்கையின் சிரேஷ்ட பிரஜைகள் கீழ்க்காணும் அனுகூலங்களைப் பெறுவர்.

கணக்கு நிலுவையாக ஆகக்குறைந்த தொகையான LKR 20,000/- இனைப் தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கோ அல்லது 12 மாதங்களுக்கோ பேணுவோர் இவ்வனுகூலங்களைப் பெறத் தகுதியுடையோராகின்றனர்.

  • 70 வயதுக்கு மேற்பட்ட கணக்கு வைப்பாளர்களுக்கு
    • ஆகக்குறைந்த பெறுமதியான LKR 20,000/- ஐ அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை தொடர்ச்சியாக 12 மாதங்களுக்குப் பேணுவோர் இவ்வனுகூலங்களைப் பெறத் தகுதியுடையோராவர்.
  • மருத்துவச் செலவீனங்களை மீளப் பெறல்
  • மருத்துவச் செலவீனங்கள் (மருந்துப் பொருட்களின் கொள்வனவு, மருத்துவரின் ஆலோசனைக் கட்டணங்கள், எக்ஸ் கதிர் செலவீனங்கள் உள்ளடங்கலாக ஏனைய மருத்துவ செலவீனங்கள், மருத்துவ விசாரணைச் செலவீனம் மற்றும் இன்னும் பல) என்பன கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு உச்ச பட்ச எல்லை வரை கோரப்படலாம். (மருத்துவரின் மருந்துச் சிட்டை மற்றும் தேவைப்பாடுகளுக்கேற்றவாறான ஆவணங்கள் என்பன மூன்று மாத காலப்பகுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
    • 70 - 79 வருடங்கள் - LKR 5,000/-- வரையான மருத்துவ ரசீதுகளுக்கான கொடுப்பனவுகள்
    • 80 - 89 வருடங்கள் - LKR 10,000/-- வரையான மருத்துவ ரசீதுகளுக்கான கொடுப்பனவுகள்
    • 90 - 99 வருடங்கள் - LKR 15,000/-- வரையான மருத்துவ ரசீதுகளுக்கான கொடுப்பனவுகள்
    • 100 வருடங்களும் அதற்கு மேலும் - LKR 20,000/-- வரையான மருத்துவ ரசீதுகளுக்கான கொடுப்பனவுகள்

**அதற்கு மேலும்முதல் தடவை கொடுப்பனவுக் கோரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் ஒரு வருட காலத்துக்கு மேற்படி எல்லைகள் செல்லுபடியாகும்.

  • நிலையான வைப்புகள் நிலையான வைப்புகளுக்கு விரிவான வட்டி
    • ஒரு வருடம் மற்றும் ஒரு - வருடாந்தம் சாதாரண வட்டி வீதத்திலும் வருடத்துக்கும்; மேற்பட்ட 0.50% மேலதிகமாக இலங்கை ரூபாயிலான நிலையான வைப்புகளுக்கு
    • NRFC நிலையான வைப்புகளுக்கு - வருடாந்தம் சாதாரண வட்டி வீதத்திலும் 0.25% மேலதிகமாக
    • RFC நிலையான வைப்புகளுக்கு - வருடாந்தம் சாதாரண வட்டி வீதத்திலும் 0.25% மேலதிகமாக
  • ஏனைய நன்மைகள்
    • நிலையான வைப்புக்களுக்கான கடனட்டை வசதிகள்
        அல்லது
    • நிலையான வைப்புகள் மூலம் உடனடிக் கடன் வசதிகள்

    நாட்டிலுள்ள கிளை வலையமைப்பு, ATM வலையமைப்பு மற்றும் 365 நாள் வங்கிச் சேவை என்பனவற்றோடு வசதியான வங்கிச் சேவை

    இலகுவான அணுகுமுறைகள்: இணையவழி வங்கிச் சேவை / SMS வங்கிச் சேவை / நடமாடும் வங்கிச் சேவை உங்கள் கணக்கை இப்போதே ஆரம்பியுங்கள் இணையவழி ஊடாக விண்ணப்பியுங்கள்

ஆரம்பிப்பது எவ்வாறு
  • தகுதி
    • 55 வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இலங்கைப் பிரஜைகள்.
  • தேவைப்படும் ஆவணங்கள்
    • தேசிய அடையாள அட்டை ஃ செல்லுபடியான கடவுச்சீட்டு / செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்.
    • நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் வழங்கப்பட்டுள்ள முகவரி உங்கள் தற்போதைய முகவரியில் இருந்த வேறுபட்டால், மூன்று மாதகாலப்பகுதிக்கும் குறையாத கட்டணப்பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.